குமுறிக் குமுறி அழும் பிரேம்ஜி அமரன்: யார் காரணம்?
சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி சோகத்தில் உள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் சிங்கிளாக ஜாலியாக உள்ளார். இதை நாங்கள் சொல்லவில்லை. அவரே தெரிவித்துள்ளார். ரொம்பவும் பயபக்தியான பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறாராம்.
அப்படிப்பட்ட பெண் இன்னும் கிடைக்காததால் சிங்கிளாக உள்ளார்.
பிரேம்ஜி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகரான பிரேம்ஜி அமரன் நேற்றைய ஐபிஎல் போட்டியை பார்த்து நொந்துவிட்டார். சென்னை அணி மும்பை இந்தியன்ஸிடம் தோல்வி அடைந்ததை அடுத்து அவர் குமுறிக் குமுறி அழும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அழுகை
பிரேம்ஜி கதறி அழும் வீடியோவை வெளியிட்டதை பார்த்த அவரின் தங்கை வாசுகி பாஸ்கர் பதிலுக்கு ஒரு பெண் அழும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

வெற்றி
ஐபிஎல் போட்டிகள் துவங்கியதில் இருந்து இதுவரை சென்னை அணி இரண்டு முறை தோல்வி அடைந்துள்ளது. மும்பை அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன்
ஐபிஎல் தொடரில் தோனி புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது அதிகபட்சமாக 150 ஐபிஎல் போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்துள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவரின் ஆட்டத்தை பார்த்தவர்கள் அவருக்கா வயசாச்சு இல்லவே இல்லை என்றார்கள்.


Click it and Unblock the Notifications











