சென்னை ஏர்போர்ட்டில் வைத்தே பீர் அடிக்கிறாரே.. தாய்லாந்திலும் சேட்டை.. பிரேம்ஜி அமரன் வாழ்றாரே ப்பா!

சென்னை: கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி அமரனுக்கு கடந்த வருடம் இந்து என்பவருடன் திருமணம் நடந்தது. சமீபத்தில்தான் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இது ஒருபக்கம் இருக்க படங்களில் நடிப்பது, கான்செர்ட்டில் கலந்துகொண்டு பாடுவது என கரியரிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் பிரேம்ஜி அமரனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

கங்கை அமரனின் மகன்களில் ஒருவர் பிரேம்ஜி. லண்டனில் இசை தொடர்பான படிப்பை படித்துவிட்டு யுவன் ஷங்கர் ராஜாவிடம் பணியாற்றினார். இசையில் பிஸியாக இருந்த அவரை; வல்லவன் படத்தின் மூலம் நடிகராக மாற்றினார் சிம்பு. அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தார். சிவகார்த்திகேயன்கூட ஒருமுறை, 'வெங்கட் பிரபு கதை இல்லாமல்கூட படம் செய்வார்; ஆனால் தம்பி இல்லாமல் படம் செய்யமாட்டார்' என கலாய்த்தது நினைவுகூரத்தக்கது.

இசையிலும் பிஸிதான்: நடிப்பில் பிஸியாக மாறினாலும் இசையையையும் பிரேம் விட்டுவிடவில்லை. கோவா படத்தின் பாடல்களுக்கு யுவன் இசையமைக்க; அப்படத்தின் பின்னணி இசையை பிரேம் கவனித்துக்கொண்டார். அதேபோல் என்னமோ நடக்குது, அச்சமின்றி, ஆர்.கே.நகர், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் பார்ட்டி படத்துக்கும் பிரேம்தான் இசை. ஆனால் படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

Premgi Amaren s Airport Instagram Story Goes Viral Fans React with Funny Comments

சிங்கிள் டூ மிங்கிள்: நடிப்புக்கும், இசைக்கும் பிரேம்ஜி எப்படி ஃபேமஸோ அதேபோல் சிங்கிளுக்கு சில காலம் ஃபேமஸாக இருந்தார். தான் அணிந்துவரும் டி ஷர்ட்டுகளில் எல்லாம் சிங்கிள்தான் கெத்து என்ற வாசகம் இடம்பெறும்படி பார்த்துக்கொள்வார். கடைசிவரை அவர் சிங்கிளாகத்தான் இருப்பார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த வருடம் சேலத்தை சேர்ந்து இந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர். பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.

பெண் குழந்தைக்கு அப்பா: அவர்களது திருமணம் திருத்தணியில் வெங்கட் பிரபு முன்னிலையில் சிம்ப்பிளாக நடந்தது. நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். மேலும் சில வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே படங்களில் நடிப்பது, கான்செர்ட்டில் கலந்துகொண்டு பாடுவது என பிஸியாகவும் இருக்கிறார். சமீபத்தில்கூட யுவனின் கான்செர்ட்டில் அவர் மேடையேறி பாடி அப்ளாஸை அள்ளினார்.

பிரேம்ஜியின் இன்ஸ்டா ஸ்டோரி: திருமணம் ஆனதிலிருந்து பொறுப்புள்ள குடும்பஸ்தனாக மாறிவிட்டார் என்று பிரேமுக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள். அவருமே அதை சில மேடைகளில் மகிழ்ச்சியோடு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரேம்ஜியின் இன்ஸ்டா ஸ்டோரி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது சென்னை ஏர்போர்ட்டில் வைத்து பீர் ஒன்றை கிளாஸில் ஊற்றி வைத்து வீடியோ எடுத்திருக்கும் அவர்; தாய்லாந்து விமான நிலையத்தில் டின் பீரை திறந்து வைத்தபடி வீடியோவாக போட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, அட பிரேம்ஜி வாழ்றாரு ப்பா.. வீட்டில் பெர்மிஷன் கிடைப்பதில்லை போல அதனால்தான் தாய்லாந்து செல்கையில் சென்னையிலிருந்தே பார்ட்டியை ஆரம்பித்துவிட்டாரே என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X