பிரேம்ஜிக்கு பிறந்த பெண் குழந்தை.. மனைவி இந்து பகிர்ந்த சூப்பர் ஃபோட்டோ.. உச்சக்கட்ட ஹேப்பி

சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் கடந்த வருடம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் திருத்தணியில் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. சூழல் இப்படி இருக்க அந்தத் தம்பதிக்கு சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரேம்ஜியின் மனைவி இந்து தனது குழந்தைக்கு வந்திருக்கும் கிஃப்ட் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

கங்கை அமரனின் இரண்டாவது மகனான பிரேம்ஜி வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். இசை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரும் இசையமைப்பாளராக ஜொலிப்பார் என்றுதான் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிம்பு அவரை நடிகராக மாற்றிவிட; தொடர்ந்து பிஸியான நடிகராக மாறிவிட்டார். ஆரம்பத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அதிகம் நடித்துவந்த அவர் காலம் செல்ல செல்ல மற்ற இயக்குநர்களின் படங்களிலும் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார்.

ஹீரோ பிரேம்ஜி: காமெடி ரோலை மட்டும் ஏற்றுவந்த பிரேம்ஜி அமரன் வல்லமை படத்தின் மூலம் ஹீரோவாகவும் மாறினார். கருப்பையா முருகன் என்பவர் இயக்கியிருந்த அந்தப் படம் பெண் பிள்ளைக்கு நடக்கும் அநீதி பற்றியும், அதை எதிர்த்து போராடும் தந்தை பற்றியும் அமைந்திருந்தது. கதைக்கு ஏற்ற பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளியிருந்தார் பிரேம்.

Premgi Amaren Wife Indhu Share a photo of Cute Gift for New born Baby
Photo Credit:

திருமணம் செய்துகொண்ட பிரேம்ஜி: இதற்கிடையே தான் எப்போதுமே சிங்கிளாகத்தான் இருப்பேன் என்பதை பேட்டிக்கு பேட்டி வெளிப்படுத்திக்கொண்டிருந்த பிரேம்ஜிக்கு திடீரென காதல் மலர்ந்தது. சேலத்தை சேர்ந்த இந்து என்பவருடன் சோஷியல் மீடியாவில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற; பிரேம் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குடும்பத்தினர் உடனடியாக திருமணத்துக்கு ஓகே சொன்னார்கள். திருத்தணியில் கடந்த வருடம் திருமணம் நடந்தது.

பெண் வீட்டில் பிரச்னை?: பிரேம்ஜி - இந்து திருமணத்துக்கு இரண்டு வீடுகளிலும் பெரிய பிரச்னை எதுவும் இல்லை. அதேசமயம் இந்துவின் சகோதரருக்கு இந்தத் திருமணத்தில் திருப்தியில்லை என்றும் அதனால் அவர் திருமணத்துக்கே வரவில்லை என்றும் அந்த சமயம் ஒரு பேச்சு எழுந்தது நினைவுகூரத்தக்கது. எது எப்படியோ அவர்கள் இரண்டு பேரும் திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள்.

பெண் குழந்தை: அவர்களது மகிழ்ச்சி மற்றும் அன்பின் அடையாளமாக சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தம்பதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் வல்லமை பட இயக்குநர் முகநூலில் பகிர்ந்ததை அடுத்து விஷயம் வெளியே தெரிந்தது. அதனைத் தொடர்ந்து அனைவருமே அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

இந்நிலையில் இந்துவின் குழந்தைக்கு அவரது தோழி ஒருவர் அழகான உடைகளை பரிசாக கொடுத்திருக்கிறார். அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தி இந்த மென்மையான அவுட்ஃபிட் அருமையாக இருக்கிறது. நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ குழந்தைக்கு வந்த பரிசையெல்லாம் ஃபோட்டோவா போடுறீங்க குழந்தை முகத்தை எங்களுக்கும் காட்டுங்களேன் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X