எங்க கல்யாணம்.. தப்பா கமெண்ட் செஞ்சாங்க.. இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?..பிரேம்ஜி மனைவி ஷேரிங்ஸ்

சென்னை: பிரேம்ஜி அமரன் கடந்த ஜூன் மாதம் இந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார். வெங்கட் பிரபு முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்து சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இருவருக்கும் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட பழக்கம் பின்நாட்களில் காதலாக மாறியது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அவர்களின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா செல்லவில்லை. அதனையடுத்து பலரும் பலவாறு தங்களது யூகங்களை சொல்ல ஆரம்பித்தனர்.

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரேம்ஜி அமரன். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான அவர் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.கடைசியாக அவர் வெங்கட் பிரபு இயக்கிய GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

premgi amaren ilayaraaja

நோ திருமணம்: பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். அதுகுறித்து கேட்டால் ஜாலியான பதிலையே சொல்வார். அதேபோல் தான் அணிந்து வந்த டி ஷர்ட்டுகளிலும் பெரும்பாலும் நான் ஒரு முரட்டு சிங்கிள் என்ற வாசகம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். இதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள்; ஒருவேளை பிரேம்ஜிக்கு திருமணம் மீது சுத்தமாக ஆசை இல்லையோ என்ற கேள்வியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுப்பிவந்தனர்.

சிம்பிளாக முடிந்த திருமணம்: இந்தச் சூழலில் திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜியின் திருமணம் நடைபெற்றது. அவர் இந்து என்ற பெண்ணை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். இத்திருமணத்தில் பிரேம்ஜியின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பிரேம்ஜி திருமணம் செய்துகொண்டதை அடுத்து தொடர்ந்து தானும், தனது மனைவியும் இருக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அது சோஷியல் மீடியாக்களில் செம ட்ரெண்டாகும்.

முகநூல் பழக்கம்?: இருவருக்கும் முதலில் முகநூலில் ஆரம்பித்த பழக்கம்; பிறகு வாட்ஸ் அப்பில் நீண்டிருக்கிறது. அந்த வாட்ஸ் அப் உரையாடலில்தான் இருவருக்குமான காதல் மலர்ந்ததாகவும்; முதலில் இந்துதான் பிரேம்ஜியிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இருவருக்கும் 20 வயதுவரை வித்தியாசம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இளையராஜா ஆப்சென்ட்: இதற்கிடையே இவர்களின் திருமணத்துக்கு இளையராஜா செல்லவில்லை. அதனையடுத்து பலரும் தங்களது யூகங்களை பல்வேறு விதமாக சொல்ல ஆரம்பித்தார்கள். குறிப்பாக கங்கை அமரனுக்கும், இளையராஜாவுக்கும் நடந்த பிரச்னையால்தான் திருமணத்தில் இசைஞானி ஆப்சென்ட் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட இருவரும் இதுவரை அமைதியாகவே இருக்கிறார்கள். இந்தச் சூழலில் பிரேம்ஜியின் மனைவி இந்து அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்து பேட்டி: அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இளையராஜா மாமா எங்கள் திருமணத்துக்கு வரவில்லை என்று சமூக வலைதளங்களில் எல்லோரும் தவறாக கமெண்ட் செய்திருந்தார்கள். எங்கள் திருமணம் கோயிலில் நடந்தது. சரியான கூட்டம். அதனால்தான் அவரால் வர முடியவில்லை. ஆனால் எங்கள் இரண்டு பேரையும் இளையராஜா அவரது வீட்டுக்கு அழைத்து மனதார வாழ்த்தி ஆசீர்வாதம் செய்தார். எங்களுக்காக நேரம் ஒதுக்கி விருந்தும் வைத்தார். அதற்கு பிறகு எங்களால் வாழ்நாள் முழுக்கவும் மறக்கவே முடியாத பரிசு ஒன்றை கொடுத்தார். அதை வெளியில் சொல்லமாட்டோம். அது அப்படி ஒரு பரிசு" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X