என்ன கொடுமை சரவணன்.. பிரேம்ஜிக்கும் அவர் மாமியாருக்கும் ஒரே வயசா.. குண்டை தூக்கிப் போட்ட அந்தணன்!
சென்னை: தமிழ் சினிமாவில் சில நடிகர்களும் நடிகைகளும் இன்னமும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகின்றனர். சிம்பு, திரிஷா, எஸ்.ஜே. சூர்யா, கிரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்த வரிசையில் இருந்து வந்த பிரேம்ஜி தற்போது அதிலிருந்து விலகி குடும்பஸ்தனாக மாறியுள்ளார்.
கடந்த ஜூன் 9-ஆம் தேதி பிரேம்ஜி மற்றும் இந்துவுக்கு அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி திருக்கோயிலில் திருமணம் நடைபெற்றது. பிரேம்ஜி திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இளையராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. நடிகர்கள் ஜெய், சிவா உள்ளிட்ட சென்னை 600028 கேங் அப்படியே திருமணத்தில் பங்கேற்றனர். விஜய், சிம்பு உள்ளிட்ட பிரபல நடிகர்களும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றால் அதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேம்ஜியின் வயது: 1979ம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி கங்கை அமரனுக்கு மகனாக பிறந்தவர் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட் பிரபு 2001 ஆம் ஆண்டு ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். வெங்கட் பிரபுக்கு ஷிவானி பிரபு என்கிற வயதுக்கு வந்த மகள் உள்ளார். 45 வயதில் நடிகர் பிரேம்ஜி காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்து வயது: கொரோனா காலத்தில் சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு காரணமாக இந்து மற்றும் பிரேம்ஜி காதலிக்கத் தொடங்கினர். அதன் பின்னர் இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் ரெடின் கிங்ஸ்லி 45 வயதில் திருமணம் செய்துக் கொண்டதை போல பிரேம்ஜியும் 45 வயதில் திருமணம் செய்துக் கொண்டார். அவர் திருமணம் செய்த இந்துவின் வயது 25 தான் என அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர்.
மாமியாருக்கும் பிரேம்ஜிக்கும்: பிரேம்ஜியின் மனைவி இந்துவின் அம்மாவுக்கும் பிரேம்ஜிக்கும் ஒரே வயது என்கிற தகவலை வலைபேச்சு அந்தணன் புதிய வீடியோவில் கூறி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் 20 வயது வித்தியாசம் என்கிற தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், பிரேம்ஜிக்கும் அவரது மாமியாருக்கும் ஒரே வயதா? என ரசிகர்கள் கேட்டு "என்ன கொடுமை சரவணன்" என கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், வெங்கட் பிரபுவின் மனைவியும் மகளும் திருமணத்துக்கு வரலையே கவனிச்சீங்களா? என்றும் புதிய வெடியை கொளுத்திப் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











