மனைவியின் கன்னத்தை பிடித்து காதல் ரசத்தை பிழியும் பிரேம்ஜி.. புதுமண தம்பதியின் லேட்டஸ்ட் பிக்ஸ்!

சென்னை: நடிகர் பிரேம்ஜி மற்றும் இந்துவுக்கு கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருத்தணியில் கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தில் பிரேம்ஜியின் நெருங்கிய நண்பர்களும் நடிகர்களும் கலந்து கொண்டனர். அண்ணன் வெங்கட் பிரபுவின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

premgi indhu venkat prabhu goat

இளையராஜா, கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா என யாருமே அந்த திருமணத்தில் பங்கேற்காதது சர்ச்சையை கிளப்பிய நிலையில், பெரியப்பா இளையராஜாவை சந்தித்து பிரேம்ஜி தனது மனைவி இந்து உடன் ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் வெளியாகி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

premgi indhu venkat prabhu goat

பிரேம்ஜி மற்றும் இந்துவின் திருமண புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது பிரேம்ஜி கேஷுவலாக டி ஷர்ட் அணிந்தும் இந்து திருமணக் கோலத்தில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

premgi indhu venkat prabhu goat

காதல் திருமணம்: காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதை பிரேம்ஜி மற்றும் இந்து நிரூபித்துள்ளனர். பிரேம்ஜியை விட 15 முதல் 20 வயது வரை இந்துவின் வயது குறைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சோஷியல் மீடியா சாட் மூலம் கொரோனா காலத்தில் மலர்ந்த காதல் பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் வரைக்கும் வந்திருக்கிறது எனக் கூறுகின்றனர்.

premgi indhu venkat prabhu goat

பிரேம்ஜி பயங்கர ஹேப்பி: முரட்டு சிங்கிளாகவே பிரேம்ஜி இருந்து விடுவாரோ என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திடீரென திருமணத்தை முடித்து நானும் இனிமேல் குடும்பஸ்தனாக மாறிவிட்டேன் எனக் கூறியுள்ளார். தனது மனைவி இந்துவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

premgi indhu venkat prabhu goat

லேட்டஸ்ட் புகைப்படங்கள்: டி ஷர்ட் அணிந்து கொண்டு பிரேம்ஜி படு கேஷுவலாக வழக்கம் போல போஸ் கொடுக்க பட்டுப் புடவையில் அவரது மனைவி இந்து இருக்கும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. திருமணத்துக்கு முன்பாக மேக்கப் போடும் போது எடுத்த போட்டோக்களா என கேள்விகள் எழுந்துள்ளன.

premgi indhu venkat prabhu goat

மனைவியின் கன்னத்தை பிடித்து: படு ரொமான்ஸ் மூடில் இருக்கும் சத்ய சோதனை பட ஹீரோ பிரேம்ஜி தனது மனைவி இந்துவின் கன்னத்தை பிடித்துக்கொண்டு ரொமான்டிக்காக போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் புதுமணத் தம்பதியினருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தில் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

premgi indhu venkat prabhu goat

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X