Premgi: மாமியார் மசாலா.. சமையலில் ரீடேக் வாங்கிய பிரேம்ஜி.. குடும்பஸ்தனா நல்லா ஃபிட் ஆயிட்டாரே!

சென்னை: கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட திரைப் பிரபலங்களில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜியும் ஒருவர். இவர் சேலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் இந்து என்பவரை, காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னர் சிங்கிளாக செம ஜாலியாக இருந்த பிரேம்ஜி, திருமணத்திற்குப் பின்னர் பக்கா குடும்பஸ்தனாக மாறிவிட்டார். சமையல் அறையில் அவர் சமையலில் சொதப்பிய வீடியோவை பிரேம்ஜியின் மனைவி இந்து பகிர்ந்துள்ளார்.

பிரேம்ஜிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பிரேம்ஜியின் திருமணத்தில் இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் கலந்து கொள்ளவில்லை. இதுவே பெரும் கேள்வியாக எழுந்தது. இளையராஜா குடும்பத்தினர் சார்பில், கார்த்திக் ராஜா மட்டும் கலந்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர், பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதியர் இளையராஜாவை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றார்கள்.

Premgi Wife Premgi Ilayaraaja

ஜாலி தம்பதியர்: பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதியர் செம ஜாலியான அதே நேரத்தில் அன்பைப் பொழிந்து வரும் தம்பதியர்களாக இருந்து வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் இருவரும் அவ்வப்போது ஏதாவது வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர் இருவரும் தங்களது தல தீபாவளி, தல பொங்கலை செம ஜாலியாக கொண்டாடினார்கள்.

குடும்ப பிரச்னை: சில மாதங்களுக்கு முன்னர் இந்து அளித்த பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்து கொண்ட தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது, " எனது திருமண புகைப்படத்தில் எனது அப்பா, அம்மா , தாத்தா, பாட்டி புகைப்படங்களை எடிட் செய்துதான் சேர்த்தோம். இதில் என் தம்பி மட்டும் இல்லை. என் தம்பி திருமணத்திற்கு வரவில்லை. என் தம்பிக்கு அவரை ( பிரேம்ஜியை) பிடிக்கவில்லை. பிரேம்ஜியும் என் தம்பியிடம் பேசிப் பார்த்தார். ஆனால் எனது தம்பி விருப்பம் காட்டவில்லை. இப்போது எனது தம்பி கல்லூரிக்கு போய்க்கொண்டு உள்ளார். எனது திருமணத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு மெச்சூரிட்டி இல்லை, போக போக புரிந்து கொள்வார் எனக் கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

குடும்பஸ்தன்: இந்துவின் அம்மாவும் பிரேம்ஜியின் மாமியார், மசாலாக்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். அதற்கு பிரேம்ஜி மாமியார் மசாலா என பெயர் வைத்துள்ளார். பிரேம்ஜி பக்காவான குடும்பஸ்தனாக மாறியுள்ளார். தனது வீட்டில் மீன் சமைக்கும் பிரேம்ஜியின் வீடியோவை அவரது மனைவி இந்து, வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். அதில் மீனை திருப்பி போடுகிறேன் என சொதப்பியுள்ளார் பிரேம்ஜி. இந்த வீடிடோவுக்கு, நான் சமையல் செய்யல, சமையல்தான் என்னை செஞ்சுடுச்சு என கேப்ஷன் இட்டுள்ளார் இந்து. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X