பூஜா ஹெக்டேவ அப்படி பார்த்து.. நாயகன் கமலாக மாறிய பிரேம்ஜி.. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கப்பா!

சென்னை: ஷூட்டிங் எல்லாம் முடிந்து ஒருவழியா வீட்டுக்கு வந்துட்டேன் என பூஜா ஹெக்டே படுத்தபடி கொடுத்த போஸை பார்த்து இசை சுனாமி பிரேம்ஜி போட்ட ரியாக்‌ஷன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படம் பெரிய ஹிட் அடித்ததும் பூஜா ஹெக்டேவுக்கு ஏகப்பட்ட பெரிய படங்கள் கிடைத்தன.

ஆனால், அந்த படத்திற்கு பிறகு அவருக்கு ஒரு பெரிய ஹிட் கூட கிடைக்கவில்லை என்பது தான் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

புட்டபொம்மா

புட்டபொம்மா

மிஷ்கினின் முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக எப்பவோ தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் தோல்வியடைந்த நிலையில், அப்படியே டோலிவுட், பாலிவுட் என செட்டில் ஆனார். அங்கேயும் அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்தன. ஹ்ரித்திக் ரோஷனின் மொகஞ்சதாரோ படம் எல்லாம் டிசாஸ்டர். கடைசியாக அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படம் ஹிட் ஆனதும் புட்டபொம்மா புட்டபொம்மா என ரசிகர்கள் மட்டுமின்றி ஏகப்பட்ட முன்னணி நடிகர்களும் பூஜா ஹெக்டே பின்னாடி சுற்றி அவரை ஹீரோயினாக புக் செய்தனர்.

பிரம்மாண்ட ஃபிளாப்

பிரம்மாண்ட ஃபிளாப்

பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் என்றதுமே உடனடியாக ஓகே சொன்ன பூஜா ஹெக்டேவுக்கு இந்த ஆண்டு இதுவரை சரியான ஆண்டாக அமையவில்லை என்பது தான் சோகமான செய்தி. பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம், விஜய்யுடன் பீஸ்ட், ராம்சரண் உடன் ஆச்சார்யா என அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான அத்தனை பெரிய படங்களும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

பாலிவுட் படங்கள்

பாலிவுட் படங்கள்

ரன்பீர் கபூரின் சர்க்கஸ், சல்மான் கானின் கபி ஈது கபி திவாளி உள்ளிட்ட இரு பாலிவுட் படங்களிலும் பூஜா ஹெக்டே தான் ஹீரோயின். அது போக டோலிவுட்டில் உருவாகி வரும் ஜன கண மன படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பட ஷூட்டிங் எல்லாம் முடிந்து மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன் என தற்போது ஒரு புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

படுத்துக்கொண்டு செல்ஃபி

படுத்துக்கொண்டு செல்ஃபி

தனது படுக்கையில் சில புத்தகங்கள் சிதறிக் கிடக்க, பிங்க் டாப்பில் படு கவர்ச்சியாக படுத்தபடி பூஜா ஹெக்டே எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்துள்ளார். பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணித்தும் நெட்டிசன்கள் ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டும் வருகின்றனர்.

நாயகனாக மாறிய பிரேம்ஜி

நாயகனாக மாறிய பிரேம்ஜி

சோஷியல் மீடியாவில் அனைத்து நடிகைகளையும் ஃபாலோ செய்து வரும் நடிகர் பிரேம்ஜி பூஜா ஹெக்டே இப்படியொரு போஸ்ட்டை போட்ட உடனே நாயகன் படத்தில் நெஞ்சை பிடித்துக் கொண்டு கமல் நடித்த காட்சியை பதிவிட்டு கமெண்ட் செய்துள்ளார். அவரது போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் சீக்கிரம் இவருக்கு ஒரு கல்யாணத்தை பண்ணுங்கப்பா ஒரு ஹீரோயினையும் விட மாட்டேங்கிறாரு என கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X