90ஸ் கிட்ஸை ஏமாற்றிய வெங்கட் பிரபு.. தவறை சுட்டிக் காட்டிய பிரேம்ஜி.. கலகலக்கும் ட்விட்டர்!
90ஸ் கிட்ஸை ஏமாற்றிய வெங்கட் பிரபு.. தவறை சுட்டிக் காட்டிய பிரேம்ஜி.. கலகலக்கும் ட்விட்டர்!
Recommended Video
சென்னை: லாக் டவுன் அறிவித்த நிலையில், வேலைக்கு போகாமலும், கல்லூரிக்கு போகாமலும், பல இளைஞர்கள் வீட்டிலேயே வெட்டியாக இருப்பது பல விஷயங்களை வெளிக் கொண்டு வருகிறது.
கே டிவியில் மங்காத்தா போட்ட நிலையில், அஜித் செயின் பற்றிய தகவலை காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் ரிவீல் செய்தார்.
இந்நிலையில், நேற்று இரவு கே டிவியில் போட்ட முதல்வன் திரைப்படம், வெங்கட் பிரபுவின் இன்னொரு பெரிய மிஸ்டேக்கை அவரது தம்பி மூலமாவே வெளிக் கொண்டு வந்து விட்டது.

களைகட்டும் டிவி சேனல்கள்
அலுவலகங்கள், கல்லூரிகள் என மக்கள் சென்ற நிலையில், மொபைலில் யூடியூப் வீடியோக்களும், நெட்பிளிக்ஸ், அமேசான் என கண்டு களித்தனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் லாக் டவுனில் கிடக்கும் நபர்களுக்கு, கே டிவி மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் டிவி சேனல்கள் சூப்பர் ஹிட் படங்களாக போட்டு அசத்துகின்றன.

நேற்று முதல்வன்
முத்து, கில்லி போன்ற படங்கள் சன் டிவியில் போடப்பட்டு வரும் நிலையில், அதற்கு டஃப் கொடுக்கும் விதத்தில் கே டிவியில் மங்காத்தா, அமர்க்களம், பூவே உனக்காக, லவ் டுடே என எவர் க்ரீன் திரைப்படங்களை களமிறக்கி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு ஒளிபரப்பான முதல்வன் படத்தை ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டு களித்தனர்.
சரோஜாவா? சுஷ்மாவா?
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான முதல்வன் படத்தை பார்த்த வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி, சுஷ்மா சாமா நிக்காலோ என அந்த சேட்டு சொல்லும் வசனத்தைக் கேட்டு, அண்ணா அது சரோஜா இல்ல சுஷ்மா? என்று நக்கலடித்து கமெண்ட் செய்துள்ளார்.
வெங்கட் பிரபு மழுப்பல்
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை - 600028 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வரும் சரோஜா சாமா நிக்காலோ பாடல் வரியில் பிழை இருப்பதை பிரேம்ஜி சுட்டிக் காட்டிய நிலையில், அப்போ எனக்கு சரோஜான்னு கேட்டுச்சு, எப்படி இருந்தாலும் விதை ஷங்கர் சார் போட்டது தான் என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
என்னங்க அநியாயம் இதெல்லாம்
வெங்கட் பிரபு சத்தம் இல்லாமல் செய்த ஒரு தவறை நேற்று போட்ட முதல்வன் படத்தை பார்த்து கண்டுபிடித்து ஓப்பன் செய்துள்ளார் அவரது தம்பி பிரேம்ஜி. இந்த கான்வர்சேஷனை பார்த்த ரசிகர்கள், என்னங்க அநியாயம் இதெல்லாம், உங்களையே நம்பி இருந்த எங்களை ஏன் ஏமாத்திட்டீங்க என ரகளை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











