இளையராஜாவை சந்தித்து மனைவியுடன் ஆசி பெற்ற பிரேம்ஜி.. சண்டை சர்ச்சைகளுக்கு முடிவு கட்டிய போட்டோ!

சென்னை: கங்கை அமரனின் மகன் பிரேம்ஜியின் திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருத்தணி திருக்கோயிலில் நடைபெற்றது. பிரேம்ஜியின் அண்ணன் இயக்குநர் வெங்கட் பிரபு முன்னிலையில் அந்த திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த திருமணத்திற்கு இளையராஜா குடும்பத்தில் இருந்து யாரும் வராதது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை எழுப்பியது.

இந்நிலையில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இளையராஜாவிடம் மணமக்கள் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Premgi Indhu Ilaiyaraaja venkat prabhu yuvan shankar raja

இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்துக்கு சண்டை என்றும் அதன் காரணமாகவே இளையராஜா திருமணத்தில் பங்கேற்கவில்லை என சொல்லப்பட்டு வந்த நிலையில், அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரேம்ஜி திருமணம்: லாக்டோன் காலத்தில் சோசியல் மீடியாவில் இந்து என்கிற பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு தொடர்ந்து இருவரும் சேட் செய்து வந்த நிலையில், காதலாக மலர்ந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் பிரேம்ஜியை தேடி பிடித்து அவருடன் இந்து சாட் செய்து வந்த நிலையில் இருவரும் சந்தித்து காதலிக்கத் தொடங்கினர்.

லிவ்விங் டுகெதர்: நடிகர் பிரேம்ஜி தனது வீட்டிலேயே கடந்த ஒரு வருடமாக இந்து என்பவருடன் லிவிங் டுகெதரில் வசித்து வந்ததாகவும் தற்போது முறைப்படி திருமணம் செய்து வாழலாம் என நினைத்து இருவரும் பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இளையராஜா வரலை: தம்பி கங்கை அமரனின் இளையமகன் பிரேம்ஜியின் திருமணத்துக்கு இளையராஜா வராதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இளையராஜா குடும்பத்திலிருந்து ஏன் ஒருவர் கூட வரவில்லை என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்நிலையில், இளையராஜா அன்றைய தினத்தில் வேறு ஒரு இசை பணியில் ஈடுபட்ட நிலையில் அவரால் வர முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறிய நிலையில், திருத்தணியில் நடைபெற்ற திருமணத்தில் அவர் பங்கேற்கவில்லை என கூறுகின்றனர்.

மணமக்களை வாழ்த்திய இளையராஜா: இந்நிலையில், இளையராஜாவிடம் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இந்து வாழ்த்து பெற்ற புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தேவையற்ற சர்ச்சைகளுக்கு இந்த புகைப்படம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இளையராஜாவுக்கும் அவரது தம்பி கங்கை அமரன் குடும்பத்துக்கும் எந்த ஒரு சண்டையும் பிரச்சனையும் இல்லை எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X