அம்மாவை நினைத்து உருகும் பிரேம்ஜி.. கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு.. விரைவில் திருமணம்!
சென்னை: நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் என அவரது தந்தை கங்கை அமரன் அறிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் பிரேம்ஜி, தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுல் ஒருவர் ஆவார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான இவர், அண்ணன் இயக்கும் படத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதுவரை வல்லவன், சென்னை 28, சத்தம்போடாதே, சரோஜா, சிலம்பாட்டம், கோவா, மங்காத்தா, போடா போடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பொண்ணு செட் ஆகல
கடைசியாக சிம்பா, ஸாம்பி, ஆர்கேநகர் ஆகிய படங்களில் நடித்திருந்தார் பிரேம்ஜி. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார் பிரேம்ஜி.

பொண்ணு கிடைக்கல
42 வயதான நடிகர் பிரேம்ஜிக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் கடந்த பல ஆண்டுகளாக பெண் தேடி வருகின்றனர். ஆனாலும் இதுவரை ஒரு பெண்ணும் செட் ஆகாமல் இருந்தது.

அம்மா மரணம்
இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அவரது தந்தை கங்கை அமரன் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரேம்ஜியின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் கங்கை அமரன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ளார்.

அம்மாதான் க்ளோஸ்
அதில் அவர் கூறியிருப்பதாவது, அம்மாவின் மறைவுக்கு பிறகு பிரேம்ஜி பெரும் சோகத்தில் உள்ளார். அம்மாதான் அவருக்கு ரொம்ப நெருக்கம். எப்போதும் அம்மாவுடனே இருப்பார். அவர் இப்போது இல்லாததால் நொறுங்கி போயுள்ளார்.

நினைவு நாள் முடிந்ததும்
அவரது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். அவரது அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் முடிந்ததும் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறும். இவ்வாறு கங்கை அமரன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











