சிவாவுக்கு தங்கச்சங்கிலி பரிசளித்த ரஜினி.. எங்க அண்ணன் அட்ரஸ் கொடுக்கவா? சிம்புவை சீண்டிய பிரேம்ஜி!
சென்னை: அண்ணாத்த படத்தின் வெற்றிக்காக இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் செயின் பரிசளித்த நிலையில் நடிகர் பிரேம்ஜி சிம்புவை விளையாட்டாக வம்பிழுத்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம் அண்ணாத்த. இந்தப் படம் கடந்த மாதம் தீபாவளி தினத்தில் வெளியானது.
இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி என பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி
அதேநேரத்தில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சிவாவின் வீட்டிற்கு திடீரென சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் இயக்குநர் சிவாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கினார். ரஜினியின் திடீர் வருகையால் சிவாவின் குடும்பத்தினர் திக்குமுக்காடினர்.

சிம்புவை வம்பிழுத்த பிரேம்ஜி
மேலும் ரஜினிகாந்த், சிவாவின் வீட்டில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் 'அண்ணாத்த' திரைப்படம் பற்றி விவாதித்ததாகக் தகவல் வெளியானது. இயக்குநர் சிவாவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்த செய்தியும் போட்டோக்களும் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த செய்தியை வைத்து நடிகர் சிம்புவை வம்பிழுத்துள்ளார் நடிகர் பிரேம் ஜி.

தங்கச் செயின் கேட்கும் பிரேம்ஜி
அதாவது ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவை சந்தித்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகரும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம் ஜி, தனது அண்ணனுக்கும் தங்கச் செயின் வேண்டும் என மறைமுகமாக கேட்டுள்ளார்.

என் அண்ணன் அட்ரஸ் அனுப்பவா?
அவர் பதிவிட்டிருப்பதாவது, மை டியர் தலைவா சிலம்பரசன், என் அண்ணன் வெங்கட் பிரபுவின் அட்ரஸை அனுப்பவா என கேட்டு டிவிட்டியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சமீபத்தில் வெளியான இப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

மாநாடு திரைப்படம்
டைம் லூப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். வசூலை குவித்து வரும் மாநாடு திரைப்படம் சிம்புவின் சினிமா கேரியரில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பெரும் பிரேக்கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











