வெங்கட் பிரபு மானத்தை ட்விட்டரில் கப்பலேற்றிய பிரேம்ஜி
சென்னை: தண்ணியடிக்கும்போது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அண்ணன் வெங்கட் பிரபுவின் மானத்தை வாங்கியுள்ளார் தம்பி பிரேம்ஜி.
நாங்கள் மது எல்லாம் அருந்தவே மாட்டோம், ரொம்ப நல்லவங்க என்று எல்லாம் இயக்குனர் வெங்கட் பிரபுவும், தம்பி பிரேம்ஜி அமரனும் சொல்வது இல்லை. திரைக்கு பின்னால் செய்வதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
இந்நிலையில் தான் மது அருந்தியபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுவிட்டார் பிரேம்ஜி.
மது
பிரேம்ஜி தனது அண்ணன் கையில் ஜே.டி. மது பாட்டில் இருப்பதை பார்த்ததும் பம்மும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அண்ணன் கையில் இருந்த பாட்டிலை வாங்கி முத்தம் கொடுத்து எடுத்துச் சென்றுவிட்டார் பிரேம்ஜி.
வெங்கட் பிரபு
பிரேம்ஜி வெளியிட்ட வீடியோவை பார்த்த அண்ணன் வெங்கட் பிரபுவோ, டேய் ட்விட்டரில் போட மாட்டேன்னு சொன்னியே என்று கோபப்படுவது போன்ற ஸ்மைலியை போட்டுள்ளார்.
நெட்டிசன்
இப்படி ஜே.டி. வாங்கிக் கொடுக்கும் அண்ணன் தனக்கு இல்லையே என்று ஒருவர் ரொம்பவே ஃபீல் பண்ணியிருக்கிறார்.
ஜேடி
வெங்கட் பிரபுவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் சார் அது அவர் போட்டது இல்லை ஜே.டி. போட்டது என்று கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











