எல்லாம் சரி, மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டீங்களே பிரேம்ஜி
சென்னை: பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
படங்களில் நடிப்பதுடன் தந்தை கங்கை அமரன் வழியில் இசையமைக்கவும் செய்கிறார் பிரேம்ஜி. ட்விட்டரில் அவர் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். யாராவது கலாய்த்தாலும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் நபர்.
இந்நிலையில் அவரே அவரை கலாய்த்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரேம்ஜி
பார்லி ஜி பிஸ்கெட் பாக்கெட் கவரில் இருக்கும் பாப்பாவுக்கு பதிலாக தன் புகைப்படத்தை வைத்து ஒரு மீமை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி.

கொண்டை
முகத்தை மாற்றிய பிரேம்ஜி பாப்பாவின் கையை மாற்ற மறந்துவிட்டார். கெட்டப்பை மாற்றினாலும் மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டீங்களே பிரேம்ஜி என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.
கிண்டல்
பிரேம்ஜியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள்.
பெண்
பிரேம்ஜிக்கு பயபக்தியான பெண் வேண்டுமாம். அப்படிப்பட்ட ஒரு பெண் இன்னும் கிடைக்காததால் சிங்கிளாக உள்ளாராம். இந்நிலையில் அவருக்கு திருமணம் எப்பொழுது என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.


Click it and Unblock the Notifications











