தமிழ் ராக்கர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... தாறுமாறாக காட்சியளிக்கும் பிரேம்ஜி

சென்னை : பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள நடிகர் பிரேம்ஜி தற்போது தமிழ் ராக்கர்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரேம்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் மியூசிக்கையும் பிரேம்ஜி அமைத்துள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. படத்தில் பாடல் வரிகளை அவரது தந்தை கங்கை அமரன் எழுதியுள்ளார்.

சிறப்பான பாடி லாங்குவேஜ்

சிறப்பான பாடி லாங்குவேஜ்

சென்னை 28, கோவா உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி நடிகராக வலம்வந்துக் கொண்டிருப்பவர் நடிகர் பிரேம்ஜி. தன்னுடைய பாடி லாங்குவேஜ் உள்ளிட்டவற்றால் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறார். இவர் சந்தரமுகி டயலாக்கான என்ன கொடுமை சரவணன் வசனத்தை கலாய்த்து காமெடி செய்ததை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டார்கள்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில் தற்போது தமிழ் ராக்கர்ஸ் என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். பரணி ஜெயபால் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவர் பகிர்ந்துள்ளார். இதில் வித்தியாசமான கெட்டப்புடன் காணப்படுகிறார் பிரேம்ஜி.

சீரியஸ் ரவுடி

சீரியஸ் ரவுடி

ரவுடி கெட்டப்பில் ஒரு கையில் சைக்கிள் செயின், மறுகையில் பட்டை சாராயம் என்று உண்மையிலேயே சீரியஸ் ரவுடியாக காட்சியளிக்கிறார். ஆனாலும் அவரை சீரியசாக எதிர்பார்க்க முடியவில்லை. கண்டிப்பாக டைட்டிலையும் வைத்து பார்க்கும்போது காமெடி படமாக இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

விரைவில் சூட்டிங் நிறைவு

விரைவில் சூட்டிங் நிறைவு

இந்த படத்தின் மியூசிக்கையும் பிரேம்ஜியே செய்துள்ளார். படத்தின் பாடல் வரிகளை அவரது தந்தை கங்கை அமரன் எழுதியுள்ளார். போஸ்டரை வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் கம்மிங் சூன் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார். கே பிச்சாண்டி தயாரிப்பில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X