twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இவருக்கு தம்பியா பிறக்காம போய்ட்டமே... ஏக்கத்தில் சிவகார்த்திகேயன்... வீடியோ வெளியிட்ட பிரேம்ஜி

    |

    சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் தொகுப்பாளராக இருந்து பெரிய திரையில் தற்போது சாதித்து வருகிறார்.

    இவர் தொகுப்பாளராக இருந்தபோது பேசிய பேச்சுக்களின் தொகுப்பை தற்போது நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஏக்கத்தை பதிவு செய்துள்ளார்.

    பொண்டாட்டியை விட்டுட்டு ஏன் வந்தீங்க? சினேகனிடம் வரம்பு மீறி சண்டைக்கு போன வனிதா.. வெடிக்கும் வீடு!பொண்டாட்டியை விட்டுட்டு ஏன் வந்தீங்க? சினேகனிடம் வரம்பு மீறி சண்டைக்கு போன வனிதா.. வெடிக்கும் வீடு!

    நடிகர் சிவகார்த்திகேயன்

    நடிகர் சிவகார்த்திகேயன்

    நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் தொகுப்பாளராக இருந்து தற்போது பெரிய திரையில் சிறப்பான நடிகராக சாதித்து வருகிறார். தன்னுடைய மிமிக்ரி திறமை மூலம் இவர் விஜய் டிவியின் சிறப்பான ஆங்கராக விளங்கினார். தொடர்ந்து 3 படத்தில் காமெடியனாக தனுஷுடன் நடித்த இவர் அதன் பிறகு திரும்பி பார்க்கக்கூட நேரமில்லாமல் நடித்து வருகிறார்.

    அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்

    அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்

    அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். சில படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது சமீபத்திய படம் டாக்டர் இவருக்கு வசூல்ரீதியாக சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப் படம் விமர்சனரீதியாகவும் வெற்றிப் பெற்றுள்ளது.

    டான் படம் ரிலீஸ்

    டான் படம் ரிலீஸ்

    அடுத்ததாக இவரது டான் படம் மார்ச் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார் சிவா. டான் படத்தில் பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

    கல்லூரி மாணவராக சிவா

    கல்லூரி மாணவராக சிவா

    இந்தப் படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இதனிடையே இன்று நேற்று நாளை புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சிஜி வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    வெற்றிக்கு காரணம்

    வெற்றிக்கு காரணம்

    அனைவரின் விருப்பத்திற்குரிய நடிகராக சிவகார்த்திகேயன் விளங்கிவருவதே அவரது வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அவரை சக நடிகர்களும் விரும்புவதே அவரது சிறப்பு. இந்நிலையில் அவரது பழைய வீடியோக்களின் தொகுப்பை நடிகர் பிரேம்ஜி வெளியிட்டுள்ளார்.

    சிவா ஏக்கம்

    சிவா ஏக்கம்

    அதில் தான் வெங்கட்பிரபு கதையில்லாமல் கூட படமெடுப்பார் ஆனால் தம்பியில்லாமல் எடுக்க மாட்டார் என்று ஒரு மேடையில் கலாய்த்துள்ளார். அவரது தம்பியாக தான் பிறக்காமல் போய்விட்டேனே என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    பிரேம்ஜி வீடியோ

    பிரேம்ஜி வீடியோ

    மேலும் சென்னை 28 படம் குறித்தும் அந்த படத்தில் இணைந்த ரியல் நண்பர்கள் குறித்தும் அவர் மற்றொரு மேடையில் பேசியுள்ளார். தான் யாரிடமும் அதிகமாக வாய்ப்புகளை கேட்டதில்லை என்றும் ஆனால் வெங்கட்பிரபு கூட்டணியில் இணைய தான் விரும்பி அதிகமாக அவரிடம் வாய்ப்பு கேட்டதாகவும் சிவா குறிப்பிட்டுள்ளார்.

    தவறிய வாய்ப்புகள்

    தவறிய வாய்ப்புகள்

    ஆனால் அவரது இயக்கத்தில் நடிக்க தனக்கு சான்ஸ் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், அதன்பிறகு தங்களது கூட்டணி அமையவிருந்த நிலையில் மற்ற கமிட்மெண்ட்டுகளால் அந்த வாய்ப்பு தவறியதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    சிறப்பான அண்ணன் -தம்பி

    இந்த வீடியோவை வெளியிட்டுள்ள பிரேம்ஜி அதிகமான லவ் எமோஜிகளையும் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய அண்ணன் வெங்கட்பிரபுவையும் சிவகார்த்திகேயனையும் இந்த வீடியோவில் டேக் செய்துள்ளார். சிவா கூறியுள்ளது போல சிறப்பான அண்ணன் -தம்பியாக இவர்கள் காணப்படுகின்றனர்.

    English summary
    Sivakarthikeyan hails venkat prabhu in video shared by Premgi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X