என்ன கொடுமை சரவணா இது.. படுதோல்வியை சந்தித்த சிஎஸ்கே.. கதறல் ட்வீட் போட்ட பிரபல நடிகர்!

சென்னை: டெல்லி கேப்பிடல்ஸ் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதல் ஆட்டத்திலேயே துவைத்து தொங்கவிட்டுவிட்டது.

முதலில் பேட் செய்த சென்னை அணியின் ஆட்டத்தை பார்த்து, சிஎஸ்கே கம்பேக் டா என காலரை தூக்கி விட்டவர்கள் எல்லாம், பிரித்வி ஷா மற்றும் தவானின் ருத்ர தாண்டவ ஆட்டத்தை பார்த்து தலையில் துண்டை போட்டுக் கொண்டனர்.

சென்னை அணியின் பரம விசிறிகளான சினிமா பிரபலங்கள் சிலர் கண்ணீர் விட்டும், முதல் மேட்ச் தான் பரவாயில்லை என மனதை தேற்றிக் கொண்டும் போட்டுள்ள ட்வீட்கள் வைரலாகி வருகின்றன.

மரண அடி

மரண அடி

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா ஆரம்பமாகி விட்டது. முதல் ஆட்டத்தில் விராட் கோலியின் ஆர்சிபி வெற்றி பெற்ற சந்தோஷத்தை கொண்டாடிய சென்னை ரசிகர்கள், இரண்டாவது போட்டியில் சென்னை அணி டெல்லி அணியிடம் வாங்கிய மரண அடியால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இரக்கமே இல்லையா

இரக்கமே இல்லையா

100 ரன்களை கடந்தும் விக்கெட் இழப்பின்றி ஆளுக்கு 70 பிளஸ் ரன்களை குவித்த டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை பார்த்து சென்னை ரசிகர்களும் பிரபலங்களும் உங்களுக்கு ஈவு இரக்கமே இல்லையா என டெல்லி அணியை பார்த்து சாபம் விட தொடங்கி விட்டனர். குருவை மிஞ்சிய சிஷ்யனாக ரிஷப் பந்த் தனது அணிக்கு முதல் வெற்றியை இந்த ஐபிஎல் போட்டியில் பெற்றுக் கொடுத்துள்ளார்.

சிங்கம் டக் ஆகிடுச்சு

சிங்கம் டக் ஆகிடுச்சு

மீண்டும் கர்ஜிக்க சிங்கம் களமிறங்கிடுச்சு என வடிவேலு பட காமெடி போல வரலக்‌ஷ்மி சரத்குமார் ட்வீட் போட, இரண்டாவது பந்திலேயே பந்தை ஸ்டம்புக்குள் அடித்து டக் அவுட் ஆகி வெளியேறினார் தோனி. டக் என்கிற ஹாஷ்டேக்கை போட்டு நேற்று இரவு முழுவதும் தோனி ஹேட்டர்ஸ் வச்சு செய்தனர்.

இது முதல் கேம் தான்

இது முதல் கேம் தான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவியதை பார்த்த வரலக்‌ஷ்மி சரத்குமார், இது முதல் கேம் தான். ஓப்பனிங்கே நல்லா இருக்கு, நிச்சயம் இந்த முறை சென்னை அணி கப்பை அடிக்கும் என சிஎஸ்கே ரசிகர்களை தேற்றும் ட்வீட்டையும் போட்டுள்ளார்.

வெங்கட் பிரபு ஹேப்பி

வெங்கட் பிரபு ஹேப்பி

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய முதல் பாதி ஆட்டம் ரொம்ப சூப்பராக இருந்தது. இந்த ஐபிஎல் போட்டியில் சூப்பர் டூப்பராக சென்னை அணி விளையாடும் என்பது தெளிவாக தெரிகிறது என தனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக வழங்கப்பட்ட ஜெர்சியின் போட்டோவுடன் ட்வீட் போட்டு மனதை ஆறுதல் படுத்திக் கொண்டார்.

கதறிய பிரேம்ஜி

சென்னை 28 படத்தில் நடிகர் பிரேம்ஜி பேசிய என்ன கொடுமை சார் இது என்கிற வசனமும், எப்படி போட்டாலும் அடிக்கிறான் என்கிற வசனமும் தான் நேற்றைய போட்டியில் பலரது நினைவுகளுக்கும் வந்திருக்கும். சென்னை அணியின் படு தோல்வியை பார்த்து தாங்க முடியாமல் கதறி கதறி அழும் ஜிஃப் ஒன்றை ட்வீட் போட்டு உண்மையான ஃபீலிங்கை வெளிப்படுத்தி உள்ளார் பிரேம்ஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X