பிரேம்ஜி குடும்ப வாழ்க்கையில் இப்படியொரு பிரச்னையா? ஓபனாக பேசிய இந்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட திரைப்பிரபலங்களில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளரான பிரேம்ஜியும் ஒருவர். இவர் சேலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவரை, காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருத்தனி முருகன் கோவிலில் நடைபெற்றது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் பிரேம்ஜி இந்து தம்பதியர் தங்களது குடும்ப வாழ்வு குறித்து ஓபனாக பேசுயுள்ளது பலரது கவனத்தினை ஈர்த்தது.
தமிழ் திரையுலகின் மொரட்டு சிங்கிள் எனப்பட்டவரும் இயக்குநர் கங்கை அமரன் மகனுமான பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற்றது. முதலில் மொரட்டு சிங்கிளாக இருந்து வந்த பிரேம்ஜிக்கு திருமணம் என திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. இதனை முதலில் யாரும் நம்பவில்லை. ஆனால் அதன் பின்னர், இயக்குநரும் பிரேம்ஜியின் அண்ணனுமான வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் திருமணம் நடைபெறுவதை உறுதி செய்தார். அதன் பின்னர்தான் உண்மையாளுமே பிரேம்ஜிக்கு திருமணம் என இணையவாசிகள் நம்பினர்.இதையடுத்து இதனை வெங்கட் பிரபுவும் தனது எக்ஸ் பக்க பதிவின் மூலம் உறுதி செய்தார்.

பிரேம்ஜிக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் திருத்தணியில் நடைபெற்றது. இதில் இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் கலந்து கொள்ளவில்லை. இதுவே பெரும் கேள்வியாக எழுந்தது. இளையராஜா குடும்பத்தினர் சார்பில், கார்த்திக் ராஜா மட்டும் கலந்து கொண்டார். இளையராஜா கலந்து கொள்ளாதது ஒரு பக்கம் புகைச்சல் என்றால், இணையத்தில் வேகமாக பரவிய பத்திரிகையில் இளையராஜாவின் பெயர் இல்லாததால்தான் இளையராஜா கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்பட்டது.
இந்து - பிரேம்ஜி: ஆனால் திருமணம் முடிந்த பின்னர், பிரேம்ஜியும் அவரது மனைவி இந்துவும் இளையராஜாவைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். பிரேம்ஜி இந்து திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு உள்ளது. இருவரும் ஹனிமூன் சென்றது, தல தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.
தம்பி: மிகவும் மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை சென்று கொண்டு உள்ளது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருக்கும்போது, பிரேம்ஜியின் மனைவி இந்து தெரிவித்துள்ள விஷயம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, “ எனது திருமண புகைப்படத்தில் எனது அப்பா, அம்மா , தாத்தா, பாட்டி புகைப்படங்களை எடிட் செய்துதான் சேர்த்தோம். இதில் என் தம்பி மட்டும் இல்லை. என் தம்பி திருமணத்திற்கும் வரவில்லை. என் தம்பிக்கு அவரை ( பிரேம்ஜி) பிடிக்கவில்லை.
மெச்சூரிட்டி: அவரும் என் தம்பியிடம் பேசிப்பார்த்தார். அவன் இண்ட்ரஸ்ட் காமிக்கல. இப்பதான் காலேஜ் முடுச்சு இருக்கான். இன்னும் மெச்சூரிட்டி வரல. அவனே ரியலைஸ் பண்ணி வருவான்னு விட்டாச்சு” எனக் கூறியுள்ளார். இந்துவின் இந்த பேச்சு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதேநேரத்தில் அவரது தம்பி, விரைவில் இவர்களுடன் பேச பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











