இதெல்லாம் பார்த்தா சிம்பு கல்யாணமே பண்ண மாட்டாரே.. பிரேம்ஜி வெளியிட்ட வீடியோ.. ஆடிய ஆட்டம் என்ன?
சென்னை: கடந்த மாதம் ஜூன் 9ம் தேதி திருத்தணி கோயிலில் நடிகர் பிரேம்ஜிக்கும் அவரது காதலி இந்துவுக்கும் திருமணம் நடைபெற்றது. அண்ணன் வெங்கட் பிரபு தலைமையில் அந்த திருமணம் நடைபெற்றது. பெரியப்பா இளையராஜாவும் மற்றும் அவரது குடும்பத்தில் இருந்து திருமணத்துக்கு யாருமே வரவில்லை.
பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த சோகத்தில் இருக்கும் இளையராஜா திருமணத்தில் கலந்து கொண்டிருக்க மாட்டார் என்றனர். ஆனால், அடுத்த நாளே சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் இளையராஜா பங்கேற்றார். திருத்தணி கோயிலில் நடைபெற்ற திருமணம் என்பதால் யுவன் சங்கர் ராஜா பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது.

திருமணத்துக்குப் பிறகு ஹனிமூன் போட்டோக்களையும் மனைவியுடன் ஜாலியாக இருக்கும் வீடியோக்களையும் ரெடின் கிங்ஸ்லி போல பிரேம்ஜி போடுவார் என்று பார்த்தால், ஒரே அழுகாச்சி வீடியோவாக போட்டு வருகிறார்.
45 வயதில் திருமணம்: பிரேம்ஜிக்கு 45 வயதில் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்துவுக்கு 25 வயது தான் என தகவல்கள் வெளியாகின. மேலும், பிரேம்ஜியின் மாமியாருக்கே 45 வயது தான் என்றும் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறியது பலரையும் ஷாக் ஆக்கியது. காதலுக்கு கண் இல்லை என்பது போல வயதையும் யாரும் பெரிதாக பார்ப்பதில்லை என்கிற நிலையில், புதிதாக திருமணமான மணமக்களை பலரும் வாழ்த்தினர்.

திருத்தணியில் திருமணம்: திருத்தணியில் முதல் நாள் வரவேற்பு விழாவும் ஜூன் 9ம் தேதி திருமணமும் நடைபெற்றது. திருமணமாகி முழுசா ஒரு மாதம் கூட ஆகவில்லை. தொடர்ந்து வீட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக வீடியோக்களை போட்டு வருகிறார் பிரேம்ஜி. இளம் பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், எல்லா வேலையையும் பிரேம்ஜி தலையில் கட்டி மனைவி கொடுமைப்படுத்துகிறாரா என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆடிய ஆட்டம் என்ன?: ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் என ஏற்கனவே வீடியோ ஒன்று வெளியான நிலையில், தற்போது "ஆடிய ஆட்டம் என்ன.. பேசிய வார்த்தை என்ன.. தேடிய செல்வம் என்ன" என்கிற பாடலை போட்டு பார்ட்டி, கோவா என சுற்றித் திரிந்த முரட்டு சிங்கிளை இப்படி முட்டி வலிக்க மாடி ஏறி மனைவியின் சுடிதாரை காயப்போடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டாரே இந்து என வீடியோவை பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
சிம்புவுக்கு திருமணம் ஆன மாதிரிதான்: ஏற்கனவே திருமணம் வேண்டாம் என பல பெண்களை ரிஜெக்ட் செய்து வரும் நடிகர் சிம்பு, பிரேம்ஜி இப்படியெல்லாம் கஷ்டப்படுவதை பார்த்தால், தனக்கு இந்த ஜென்மத்தில் கடைசி வரை திருமணமே வேண்டாம் என சல்மான் கான் போல கடைசி வரை சிங்கிளாகவே வாழ்ந்து விடுவாரே என சிம்பு ரசிகர்கள் பயந்துப் போய் இப்படியெல்லாம் வீடியோ போடாதீங்க பிரேம்ஜி என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கோட் படத்தில்: அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் பிரேம்ஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











