twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பத்மாவத்' ப்ரிமீயர் ஷோ தியேட்டர்களில் தீ வைப்பு... நாடு முழுவதும் உச்சம் தொடும் வன்முறை!

    By Vignesh Selvaraj
    |

    அகமதாபாத்: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உருவாகியிருக்கும் படம் 'பத்மாவத்'.

    பல எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் பத்மாவத் திரைப்படத்தை திரையிட தடை இல்லை என அதிரடி தீர்ப்பளித்தது சுப்ரீம் கோர்ட்.

    இன்று தியேட்டர்களில் வெளியான 'பத்மாவத்' பிரிமீயர் காட்சிகளின்போது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

    பத்மாவத்

    பத்மாவத்

    பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'பத்மாவத்' திரைப்படத்தின் பிரிமீயர் காட்சிகள் பல இடங்களில் இன்று வெளியானது. பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தது.

    பிரிமீயர் ஷோ

    பிரிமீயர் ஷோ

    நேற்று 'பத்மாவத்' படத்தின் பிரிமீயர் காட்சிகள் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கமான பி.வி.ஆர் சினிமாஸில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் கூட்டமும் அதிகளவில் இருந்துள்ளது.

    வன்முறை

    அங்கு வந்த போராட்டக்காரர்கள், சமூக விரோதிகளின் கும்பல் வாகன நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு

    துப்பாக்கிச் சூடு

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் போராட்டக்காரர்கள் மீதும், சமூக விரோதிகளின் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். நேற்று முதல் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

    நாடு முழுவதும் வன்முறை

    அதேபோல, மீரட், லக்னோ உள்ளிட்ட பல இடங்களிலும் போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளைக் கொளுத்தியும், தியேட்டர்களைச் சேதப்படுத்தியும், மக்களுக்கு இடையூறாகவும் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    படத்தை வெளியிட அச்சம்

    படத்தை வெளியிட அச்சம்

    போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதால், தியேட்டர் நிர்வாகங்கள் படத்தை வெளியிட அஞ்சும் நிலை உருவாகி இருக்கிறது. இதே நிலை நீடித்தால் படம் கடும் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் உருவாக வாய்ப்பிருக்கிறது.

    பலத்த பாதுகாப்பு

    குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் இப்படத்தை திரையிட தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டு இருக்கிறது. சில இடங்களில் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் பத்மாவத் படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    English summary
    The protesters have been violent during the 'Padmaavat' premiere show in theaters today. The film was screened at PVR Cinemas in Ahmedabad. The protesters came there and fire more than 50 bikes standing in parking area of theater.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X