முரட்டு சிங்கிள் சங்கத்துக்கே நீங்கதான் தலைவர்.. பிரேம்ஜிக்கு பெருகும் ஆதரவு

சென்னை : மீண்டும் தான் சிங்கிள் என்ற போஸ்டரை பிரேம்ஜி வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், தலைவா எங்க முரட்டு சிங்கிள் சங்கத்துக்கே நீங்கதான் தலைவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

பிரேம்ஜி நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மைக் கொண்ட வித்தகர். பிரேம்ஜி கடைசியாக சிம்பா படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது இசையமைப்பாளராக கவனம் செலுத்தி வரும் பிரேம்ஜி தன் அண்ணன் வெங்கட் பிரபு படமான பார்ட்டி படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

Premji new twitter post

இசையை தாண்டி அதிகபடியாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பிரேம்ஜி பல படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறார். இவர் அதிகமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து இருக்கிறார். மேலும் பிரேம்ஜி இல்லாமல் வெங்கட் பிரபு இயக்கும் முதல் படமும் பார்ட்டி தான் .

தற்போது வெளிவந்த மாஸ்டர் படத்தின் முதல்பார்வை போஸ்டரை மாற்றி, அதில் தனது புகைப்படத்தை வைத்து அதில் மாஸ்டர் என்ற தலைப்புக்கு பதில் சிங்கிள் என்று தலைப்பு வைத்து வெளியிட்டு இருக்கிறார் பிரேம்ஜி. தான் சிங்கிள் என்ற கவலை அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட இருக்கிறது. அதனால் தான் எப்போதும் முரட்டு சிங்கிள், ஐ யம் சிங்கிள் என்று தொடர்ந்து ட்விட்டரில் கூறிவருகிறார் பிரேம்ஜி.

இந்த பதிவைப்பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிக்கு ஆதரவு தரும் நோக்கில் தலைவா நீங்க மட்டும் சிங்கிள் இல்ல நாங்களும் சிங்கிள் தான் என்றும், எங்க முரட்டு சிங்கிள் சங்கத்துக்கு நீங்கதான் தலைவர் என்றும் அவருக்கு ரசிகர்கள் கமெண்டுகள் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

வெங்கட் பிரபுவின் நண்பர்கள் குழுவில் நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்து கொண்டு இருப்பவர் பிரேம்ஜி. இவரின் திருமணத்தை சினிமாத்துறை மட்டும் எதிர்பார்க்கவில்லை இவரது ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

தற்போது பிரேம்ஜி சுரேஷ் சங்கையா அடுத்து இயக்க போகும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். பிரேம்ஜி 2015ல் வெளிவந்த மாங்கா படத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பார் அந்த படம் தோல்வி படமாக அமைய அதற்கு பிறகு ஹீரோவாக நடிக்காத பிரேம்ஜி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் .

சுரேஷ் சங்கையா ஒரு கிடாயின் கருனைமனு படத்தை இயக்கிய இயக்குனர் . ஒரு கிடாயின் கருனைமனு படம் மக்களிடையே நல்ல பெயர் பெற்று வெற்றியை பதிவு செய்த படம் ஆகும். இந்த படத்திற்கு பிறகு சுரேஷ் சங்கையா இயக்கும் படம் இது. இந்த படத்தை சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத் ராம் தயாரிக்கிறார். மேலும் சித்தார்த் நடிக்கும் டக்கர் படத்திலும் பிரேம்ஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X