Thalapathy 68: தண்ணி கேன் போட வந்தேன்.. தளபதி 68 படம் குறித்து பிரேம்ஜி போட்ட மீம்.. ஒரே ஜாலி தான்!
சென்னை: லியோ படத்தில் நடித்து முடித்த நிலையில், அந்த படத்திற்கு புரமோஷன் கூட செய்யாமல் நடிகர் விஜய் நைசாக கழண்டு கொண்டு அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டார்.

விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ வெளியான நிலையில், வெங்கட் பிரபுவின் தம்பியோடு சேர்ந்து விபி கேங் மொத்தமும் இந்த படத்தில் இருப்பதை பார்த்து விஜய் ரசிகர்களே லைட்டாக ஜெர்க் ஆகி உள்ளனர்.
இந்நிலையில், தண்ணி கேன் போட வந்தேங்க என்கிற ஓவிய மீமை ஷேர் செய்து ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார் பிரேம்ஜி.
அண்ணன் படத்துல ஹீரோவே இல்லைனாலும்: இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி சினிமாவில் தங்களுக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி உள்ளனர். வெங்கட் பிரபு இயக்குநராக மாறி பல ஹிட் படங்களை இயக்கி வரும் நிலையில், தொடர்ந்து தான் இயக்கும் படங்களில் காமெடி நடிகராக தனது தம்பி பிரேம்ஜியை நடிக்க வைத்து வருகிறார்.
மாநாடுக்கு பிறகு தோல்வி: இயக்குநர் வெங்கட் பிரபு மங்காத்தா படத்திற்கு பிறகு பல காமெடி படங்களை இயக்கினாலும் சிம்புவை வைத்து கடைசியாக அவர் இயக்கிய மாநாடு படம் தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உடனடியாக விஜய் படத்தை இயக்க கர்ச்சிப் போட்டு விட்டார். ஆனால், அதன் பின்னர் அவர் இயக்கிய மன்மதலீலை மற்றும் கஸ்டடி படங்கள் சரியாக போகவில்லை. ஆனாலும், தளபதி 68 படத்தை இயக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் தடையில்லாமல் வெங்கட் பிரபுவுடன் கொடுத்துள்ளார்.

தண்ணி கேன் போட வந்தேன்: இந்நிலையில், கண்டிப்பாக தளபதி 68 படத்தில் பிரேம்ஜியை மட்டும் சேர்க்கக் கூடாது என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், பட பூஜையிலேயே பிரேம்ஜி மட்டுமின்றி வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் உள்ளிட்ட சென்னை 28 கேங்கை இந்த படத்திலும் கொண்டு வந்து விட்டேன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரேம்ஜி தளபதி 68 படத்தில் தண்ணி கேன் போட வந்தேங்க என சொல்வது போல் உருவாக்கப்பட்ட ஓவிய மீமை ஷேர் செய்த பிரேம்ஜி அதற்கு ஸ்மைலி எமோஜிக்களை போட்டுள்ளார். விக்ரம் படத்தில் தண்ணி கேன் போட வந்தேங்க என காயத்ரியிடம் ஒரு இளைஞர் பேசும் வசனம் டிரெண்டான நிலையில், தற்போது அதை வைத்து பிரேம்ஜியை ஓட்டியுள்ளனர். கடைசியாக பிரின்ஸ் படத்தில் வில்லனாக நடித்த பிரேம்ஜி தளபதி 68 படத்தில் என்ன பண்ண காத்திருக்கிறாரோ என்கிற பயம் லைட்டா இருக்கத்தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications











