என்னை கடைசி வரைக்கும் குடும்பஸ்த்தன் ஆக விடமாட்டான் போல.. சிம்பு கமெண்ட்டுக்கு பிரேம்ஜி ரியாக்ஷன்

சென்னை: பிரேம்ஜி போன்றோர் உடனிருந்தும் நான் குடிக்காமல் இருப்பது பெரிய சவாலான விஷயம் என நடிகர் சிம்பு சொன்ன கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பிரேம்ஜி ரியாக்ட் செய்துள்ளார்.

சமீபத்தில் தான் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணத்திற்காக பெண் தேடப்பட்டு வருவதாக கங்கை அமரன் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் சிம்புவின் இந்த ஸ்டேட்மென்ட் பிரேம்ஜியை மனதளவில் ரொம்பவே பாதித்துள்ளதாக தெரிகிறது.

குடி பழக்கத்தை விட்டுட்டேன்

குடி பழக்கத்தை விட்டுட்டேன்

நல்லா குடிச்சி உடம்பை கெடுத்துக் கொண்ட நடிகர் சிம்பு மீண்டும் தனது ரசிகர்களுக்காக ஃபிட்டான சிம்புவாக வரவேண்டும் என்பதற்காக கடின உடற்பயிற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக கடந்த ஓராண்டாக தான் மது அருந்தவில்லை என்றும் குடி பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்றும் சமீபத்தில் நடிகர் சிம்பு சொன்னது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

Recommended Video

Premji சொன்ன ஒரு வார்த்தை, விரைவில் திருமணம் என GANGAI AMARAN முடிவு
பிரேம்ஜி உடனிருந்தும்

பிரேம்ஜி உடனிருந்தும்

தான் மது அருந்துவதை நிறுத்தி விட்டேன் என்று மட்டும் சொல்லாமல் போகிற போக்கில் தனது ஆருயிர் நண்பன் பிரேம்ஜியை கோர்த்து விட்டது தான் நடிகர் சிம்புவின் ஸ்டேட்மென்ட்டிலேயே ஹைலைட்டான விஷயம். பிரேம்ஜி போன்றோர் உடனிருந்தும் ஒரு வருடமாக குடிக்காமல் இருப்பது பெரிய விஷயம் என சிம்பு சேட்டை செய்திருந்தார்.

சிவனேன்னு இருந்த என்னை

போகிற போக்கில் என் மூஞ்சில ஏன் டா சேற்றை வாரி இரைத்து விட்டு சென்று விட்டாய் என்பதை நேரடியாக சொல்லாமல் வடிவேலு சேறு பூசிய முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது ரியாக்‌ஷனை தனக்கே உரிய நக்கல் பாணியில் வெளிப்படுத்தி உள்ளார் பிரேம்ஜி.

இப்போ தான் பெண் பார்க்கின்றனர்

இப்போ தான் பெண் பார்க்கின்றனர்

42 வயதாகும் நடிகர் பிரேம்ஜிக்கு இப்போ தான் அவங்க அப்பா கங்கை அமரன் பெண் பார்க்கப் போவதாக அறிவித்திருந்தார். பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சிம்புவின் இப்படியொரு ஸ்டேட்மென்ட் கடைசி வரை பிரேம்ஜியை குடும்பஸ்த்தான் ஆக்காது போல என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

சிம்புவை கெடுத்ததே

அப்போ நீங்க தான் culprit சிம்புவை கெடுத்ததே நீங்க தான் என சிம்பு ரசிகர்கள் பிரேம்ஜியின் கமெண்ட்டுக்கு கீழே சண்டைக்கு வந்து விட்டனர். நடிகர் சிம்புவுக்கு இன்னமும் திருமணம் ஆகாமல் இருக்கவும் காரணம் பிரேம்ஜி தான் என்றும் ஏகப்பட்ட கலகலப்பான கமெண்ட்டுகளை பிரேம்ஜியின் ட்வீட்டுக்கு கீழ் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X