மாநாடு 2 ஹீரோ இவரா... என்ன கொடுமை சார் இது... கலாய்க்கும் ரசிகர்கள்

சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் நவம்பர் 25 ம் தேதி ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. ரிலீஸ் செய்யப்பட்ட 25 நாட்களில் ரூ.100 க்கும் அதிகமாக வசூல் செய்து ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.

இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுவனின் உயிர் காக்க உதவுங்கள்

தியேட்டரில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து கடந்த வாரம் ஓடிடி.,யிலும் மாநாடு படம் வெளியிடப்பட்டது. இதை பார்த்து விட்டு செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சிம்பு மற்றும் டைரக்டர் வெங்கட் பிரபுவிற்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர். படம் ரிலீசாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் மக்களிடம் வரவேற்பையும், பாராட்டையும் இந்த படம் பெற்று வருகிறது.

பிரமே்ஜி ப்ரொமோஷன்

பிரமே்ஜி ப்ரொமோஷன்

இந்த படத்தில் சிம்புவின் நண்பராக பிரேம்ஜி அமரன் நடித்திருப்பார். படக்குழுவை சேர்ந்த மற்றவர்கள் வேறுவிதமாக மாநாடு படத்தை ப்ரொமோட் செய்து வரும் நிலையில், இவர் வித்தியாசமாக காமெடியாக மாநாடு படத்தை ப்ரொமோட் செய்து வருகிறார். இது சோஷியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

 இதுக்கா இந்த வீடியோ

இதுக்கா இந்த வீடியோ

சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரேம்ஜி, சிம்பு இருப்பது போன்ற மாநாடு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போல் இவரும் அன்சீன் காட்சிகள் ஏதாவது வெளியிட்டுள்ளாரோ என அனைவரும் ஆர்வமாக பார்த்தால், சிம்பு, சந்திரசேகரை காப்பாற்ற விமானத்தில் இருந்து எகிறி குதித்து ஓடி வந்து, பைக்கில் பறந்து வரும் காட்சியை வைத்து, கடைசியாக அவர் டாஸ்மாக் கடை மூடுவதற்கு முன் வருவதற்காக அப்படி வேகமாக வருவதை போல் காட்டி இருந்தார்.

மாநாட்டில் கரகாட்டக்காரனா

மாநாட்டில் கரகாட்டக்காரனா

இதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, சிம்புவை கட்டி வைத்து பேசும் சீனின் வீடியோவை பதிவிட்டார் பிரேம்ஜி. இதில் என்ன செய்து வைத்திருக்கிறார் என்று பார்த்தால், கரகாட்டக்காரன் படத்தில் வரும் ஃபேமசான வாழைப்பழ காமெடி டயலாக்கை இணைத்துள்ளார். கவுண்டமணி - செந்தில் பேசிக் கொள்ளும் வாழைப்பழ டயலாக்கை சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் பேசிக் கொள்வதை போல் மாற்றி இருந்தார்.

 மாநாடு பிரேம்ஜி வெர்சன்

மாநாடு பிரேம்ஜி வெர்சன்

இந்நிலையில் லேட்டஸ்டாக மற்றொரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மாநாடு படத்தில் சிம்பு, விமானத்தில் வரும் காட்சிக்கு அடிக்கடி சென்று ஷாக்காகி கண் விழிப்பதை போல் விமான பயணத்தின் போது கண் விழித்து நடித்து காட்டி உள்ளார் பிரேம்ஜி. அதுவும் பக்கத்து சீட்டில் டைரக்டரும், தனது சகோதரருமான வெங்கட் பிரபு திருதிருவென விழித்த படி இருக்க, அவரையும் வைத்துக் கொண்டே இந்த வீடியோவை எடுத்துள்ளார் பிரேம்ஜி.

Recommended Video

என் தலைவன் வேற Level | Maanadu பார்த்த Srinidhi பயங்கர Excited Video
மாநாடு 2 ஹீரோ இவரா

மாநாடு 2 ஹீரோ இவரா

இதை பார்த்த ரசிகர்கள், மாநாடு 2 எடுக்கப் போறதா சொன்னீங்களே ஹீரோ இவர் தானா. என்ன கொடும சார் இது. நீங்க வழக்கமா மாளவிகா மோனன் ப்ரொஃபைல் பக்கத்துல தான இருப்பீங்க. இப்போ என்ன இந்த பக்கம் என கலாய்த்துள்ளனர். அதே சமயம் சிலர், வேற லெவல் தல. வெங்கட் பிரபு ரியாக்ஷன் அடுத்த லெவல் என பாராட்டி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X