பிரேம்ஜிக்கு வாய் நிறைய பிரியாணி கொடுத்த "குட்டி"
சென்னை: ஹலோ பாய், ரம்ஜான் வாழ்த்துகள்.. அப்புறம் பிரியாணி ரெடியா.. இதுதான் இன்று சளைக்காமல் காதில் விழுந்த வார்த்தைகள்.
ரம்ஜானை இஸ்லாமியர்களை விட பிற மதத்தினர்தான் படு ஜாலியாக உற்சாகமாக வரவேற்கின்றனர் எப்போதுமே. பிரியாணிக்காக மட்டுமல்லாமல், அந்த பிரியாணியுடன் இணைந்து வரும் அன்பு மற்றும் சகோதரத்துவத்தையும் அனுபவிக்கும் அந்த தருணத்திற்காக.
திரையுலகிலும் ரம்ஜான் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. இஸ்லாமியக் கலைஞர்கள் பிற கலைஞர்களுடன் பிரியாணி பரிமாற்றம், வாழ்த்துகளுடன் ரம்ஜானை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல அவதாரம் கொண்ட பிரேம்ஜியும் சிறப்பாக ரம்ஜானைக் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில் அமேஜிங் பிரியாணிக்காக தேங்க்ஸ் குட்டி என்று போட்டுள்ளார். அவர் டேக் செய்திருப்பது நடிகர் ஜெய். ஸோ. அவர்தான் இந்த குட்டி என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
"குட்டி"யை நாமும் வாழ்த்துவோம்!


Click it and Unblock the Notifications











