அண்ணன் வெங்கட் பிரபுவுடன் ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்த பிரேம்ஜி!

சென்னை: மாநாடு படத்தின் அபார வெற்றியின் மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபு, அடுத்ததாக பிரபல முன்னணி நடிகர் ஒருவரை வைத்து பக்கா ஆக்ஷன் படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி சமீபத்தில் ராமேஸ்வரம் சென்று சுவாமி தரிசனம் செய்த அந்த புகைப்படத்தை இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இளம் நடிகர்கள் அதிக அளவில்

இளம் நடிகர்கள் அதிக அளவில்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே செம ஜாலியாக இருக்கும் குறிப்பாக இளம் நடிகர்கள் அதிக அளவில் இடம் பிடிப்பார்கள் அந்த வகையில் சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபுவுக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து சரோஜா,பிரியாணி, கோவா என இவரது இயக்கத்தில் வெளியான அடுத்தடுத்த திரைப்படங்கள் வெற்றி பெற்றது

பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது

பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது

இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் விறுவிறுப்பாக உருவாகிவந்த மாநாடு திரைப்படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து பல தடைகளை தாண்டி ஒருவழியாக திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமான படமாக இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. சிம்புவின் படங்களிலேயே இந்த படம் அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது

பிரேம்ஜியை குறைந்தது ஒரு காட்சியிலாவது நடிக்க வைப்பதை

பிரேம்ஜியை குறைந்தது ஒரு காட்சியிலாவது நடிக்க வைப்பதை

அரசியல் கலந்த திரில்லர் கதை களத்தில் வெளியான மாநாடு வெற்றிக் கொண்டாட்டத்தில் உள்ள வெங்கட்பிரபு அடுத்ததாக பிரபல முன்னணி நடிகரை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய தம்பி பிரேம்ஜியை குறைந்தது ஒரு காட்சியிலாவது நடிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரேம்ஜி மாநாடு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

Recommended Video

Maanadu படத்தை பற்றி emotional-லாக பேசிய Y.G.Mahendran | Simbhu, Venkat Prabhu, SJ Suryah
ராமேஸ்வரம் கோயிலில் பக்தியுடன் தரிசனம்

ராமேஸ்வரம் கோயிலில் பக்தியுடன் தரிசனம்

மேலும் மாநாடு திரைப்படம் விரைவில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது என பேச்சுவார்த்தைகள் அடிபடுகிறது. தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கட் பிரபு இயக்க அதிலும் பிரேம்ஜி முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த நிலையில் தற்போது இருவரும் ராமேஸ்வரம் சென்று கோயிலில் தரிசனம் செய்துவிட்டு மாலையுடன் தெய்வீக லட்சனத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரேம்ஜி இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X