twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைத்துறையில் ஜெயலலிதாவின் பங்கு மிகப் பெரியது.. பிரணாப் புகழாரம்

    |

    சென்னை: திரைத் துறையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்கு பெரிது என பாராட்டியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

    சென்னையில் நேற்று நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார்.

    பின்னர், விழாவில் அவர் ஆற்றிய உரையில்....

    வரலாற்று மனிதர்கள்....

    வரலாற்று மனிதர்கள்....

    வரலாற்றை மனிதர்கள் தான் படைக்கின்றனர். இந்தியாவில் முதல் திரைப்படத்தை தாதா சாகேப் தயாரித்து சாதனை படைத்தார்.

    திரைத்துறையின் வளர்ச்சி....

    திரைத்துறையின் வளர்ச்சி....

    இப்போது, இந்திய திரைத்துறை உலகளாவிய தொழிலாக வளர்ந்து வருகிறது. பல்வேறு தொழில்நுட்பங்களை கையாண்டு வளர்ந்து வரும் இந்திய திரைத்துறை, உலகின் பெரிய திரைத்துறைகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

    இசையால் மகிழ்ச்சி....

    இசையால் மகிழ்ச்சி....

    இதேபோல் இந்திய திரை இசையும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    சாதனையாளர்கள்....

    சாதனையாளர்கள்....

    இந்திய திரையுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகிரெட்டி போன்றோர் சாதனை படைத்துள்ளனர்.

    மகிழ்ச்சி....

    மகிழ்ச்சி....

    தமிழக முதல்வர் ஜெயலலிதாவே திரைத்துறையில் பெரும் பங்காற்றியுள்ளார். அவருக்கு முதல் விருதை வழங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    விருதுகளைத் தட்டி....

    விருதுகளைத் தட்டி....

    பெரும்பாலான தேசிய திரைப்பட விருதுகளை தென்னிந்திய திரைப்படங்கள் தட்டிச்செல்கின்றன' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Speaking at the festival organized by the South Indian Film Chamber of Commerce, Mukherjee said it is the responsibility of everyone associated with the industry to use the power of the medium to spread positive societal values.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X