twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிரிஷ் கர்னாட் மறைவு: குடியரசுத் தலைவர், கமல் ஹாஸன் இரங்கல்

    By Siva
    |

    சென்னை: பிரபல நடிகரும், நாடக ஆசிரியரும், இயக்குநருமான கிரிஷ் கர்னாட் மறைவு குறித்து அறிந்து கமல் ஹாஸன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    பிரபல நடிகரும், நாடக ஆசிரியரும், இயக்குநருமான கிரிஷ் கர்னாட் பெங்களூரில் இன்று காலமானார். அவருக்கு வயது 81. அவரின் மறைவு செய்தி குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாஸனும் கிரிஷ் கர்னாட் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

    ரஜினி Vs கமல்.. முதன்முறையாக தேர்தலில் நேருக்குநேர் மோதும் இருபெரும் ஆளுமைகள்.. ஜெயிக்க போவது யார்? ரஜினி Vs கமல்.. முதன்முறையாக தேர்தலில் நேருக்குநேர் மோதும் இருபெரும் ஆளுமைகள்.. ஜெயிக்க போவது யார்?

    கமல் ஹாஸன்

    மிஸ்டர் கிரிஷ் கர்னாடின் ஸ்க்ரிப்டுகள் என்னை வியக்க வைத்ததுடன் இன்ஸ்பையர் செய்தன. தன்னை பார்த்து இன்ஸ்பையரான எழுத்தாளர்களான பல ரசிகர்களை விட்டுச் சென்றுள்ளார். அவர்களின் பணியால் கர்னாடின் இழப்பு கொஞ்சம் தாங்கும்படி இருக்கும் என்று கமல் ஹாஸன் ட்வீட் செய்துள்ளார்.

    ட்வீட்

    ட்வீட்

    கமல் ஹாஸனின் ட்வீட்டை பார்த்தவர்களில் சிலர் கர்னாடின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ, அம்மா ஜெயலலிதா இறந்தபோது இப்படி விரிவாக ட்வீட் போடவில்லையே என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ பள்ளி புத்தகங்களில் பாரதியாருக்கு காவி தலைப்பாகை கட்டிவிட்டது குறித்து பேச உங்களுக்கு நேரமில்லையா என்று கேட்டுள்ளனர்.

    குடியரசுத் தலைவர்

    கிரிஷ் கர்னாடின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    பி.சி. ஸ்ரீராம்

    ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கிரிஷ் கர்னாடை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார். மேலும் அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கஸ்தூரி

    கிரிஷ் கர்னாடின் மறைவு குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவருடன் பேசிய நிறைய நினைவுகள் உள்ளன, அவரின் அழகான வீடு, குடும்பம், உபசரிப்பு...அது எல்லாம் செல்ஃபிக்கள் இல்லாத நாட்கள். அதனால் நினைவுகள் மட்டுமே உள்ளன என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி. சில பிரபல பத்திரிகையாளர்களோ, தைரியமாக பேசும் ஆள் கிரிஷ் கர்னாட். தேவைப்படும் நேரத்தில் இறைவன் அழைத்துக் கொண்டாரே என்று கவலை அடைந்துள்ளனர்.

    English summary
    President Ram Nath Kovind, Kamal Haasan and film industry celebs condole the death of Girish Karnad.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X