twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    40 ஆண்டுகளுக்குப் பிறகு கொடைக்கானல் சர்ச்சில் படமான முதல் படம் மறுமுகம்!

    By Shankar
    |

    சிவாஜி நடித்த வெளியான ஞானஒளி படத்தில் இடம்பெற்ற தேவனே என்னைப் பாருங்கள்... பாடல் நினைவிருக்கிறதா...?

    அந்தப் பாடல் படமாக்கப்பட்ட இடம் கொடைக்கானல் லாசலத் மாதா கோவில். அதன்பிறகு வேறு எந்தப் படத்தின் ஷூட்டிங்குக்கும் இந்த புகழ்பெற்ற தேவாலயத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை.

    40 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக இந்த தேவாலயத்தில் மறுமுகம் படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது.

    திரைப்படக் கல்லூரி மாணவர்கள்

    திரைப்படக் கல்லூரி மாணவர்கள்

    திரைப்படக் கல்லூரி மாணவர்களின் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கிற இந்தப் படத்தை பள்ளி, கல்லூரிக் கால நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். அன்லிமிட்டட் எண்டர்டெய்ன்மெண்ட் படநிறுவனத்தின் சார்பில் சன்ஜய் டாங்கி தயாரித்துள்ளார். திரைப்படக் கல்லூரி மாணவர் கமல் சுப்ரமணியம் இயக்கியுள்ளார்.

    இயக்குநர் கமல் சுப்ரமணியம், நடிகர் டேனியல்பாலாஜி, ஒளிப்பதிவாளர் கனகராஜ், எடிட்டர் ஆர்.டி. அண்ணாதுரை போன்ற பலரும் திரைப்படக் கல்லூரி மாணவர்களே.

    கதை

    கதை

    ஒவ்வொரு மனிதனுக்குள் பல முகங்கள் இருக்கும். தனக்குத் தேவைப்படும் போது சூழல் அமையும்போது தேவைப்படும் முகத்தை வெளிப்படுத்துவான். அப்படி ஒருவன் வெளிப்படுத்தும் இன்னொரு முகம்தான் 'மறுமுகம்' படக்கதை. இது ஓர் ஆக்ஷன் த்ரில்லர்.

    டேனியல் பாலாஜி

    டேனியல் பாலாஜி

    டேனியல் பாலாஜி பிரதான வேடம் ஏற்றுள்ளார். இவரும் . திரைப்படக்கல்லூரி மாணவரே. அந்த நட்பில் படக்குழுவினருடன் இணைந்துள்ளார். படத்தில் டேனியல் பாலாஜி, அனூப், ப்ரீத்தி தாஸ் மூவரும் முக்கியபாத்திரங்கள். கதாநாயகியின் அப்பாவாக பானுச்சந்தரும் அம்மாவாக உமா பத்மநாபனும் நடித்துள்ளார்கள். நடிகர் கிஷி, நடிகை ஷில்பி ஆகியோரும் நடித்துள்ளனர்.

    இளம் சிற்பி

    இளம் சிற்பி

    மாய அழகனாக டேனியல் பாலாஜியும் ராமாக அனூப்பும் ராதிகாவாக ப்ரீத்தி தாஸும் நடித்துள்ளார்கள்.

    டேனியல் பாலாஜி ஒரு சிற்பி,இளம்தொழிலதிபர். ஆனால் பெற்றோரை இழந்தவர். பாசத்துக்கு ஏங்குபவர். 'ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் மைண்ட்' என்று வருந்துபவர். அவருக்குள் காதல் வருகிறது. அது கைகூடி வருமோ என்ற பயமும் வருகிறது. அதுதான் மறுமுகம் காட்டவைக்கிறது.

    கோரமுகமும் ஈரமுகமும்

    கோரமுகமும் ஈரமுகமும்

    முதல் பாதியில் ஒரு முகம் காட்டுவார். மறுபாதியில் இன்னொரு முகம் காட்டும் போது பரபரப்பு பற்றிக் கொள்ளும். காதல் சுமந்த ஈரமுகமும் ஆவேசம் கொண்ட கோரமுகமும் டேனியல் பாலாஜிக்குத் தனித்தனி நடிப்புத் தளங்களாக அமைந்துள்ளன. டேனியல் பாலாஜியின் விஸ்வரூப தரிசனம் இரண்டாவது பாதியின் உச்சகட்டத்தில் தெரியும்.

    இன்னொரு முக்கிய பாத்திரம் அனூப். படத்தில் இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர்.

    இவர்களுக்கிடையில் உலவும் தென்றலாக ப்ரீத்தி தாஸ். இவர் கல்லூரி இறுதியாண்டு மாணவியாக வருகிறார்.

    டேனியல் பாலாஜி,அனூப், ப்ரீத்தி தாஸ் இவர்கள் மூவருக்குள் நிகழும் கதைச் சம்பவங்களே படத்தின் போக்கு.

    திட்டமிட்ட உழைப்பு

    திட்டமிட்ட உழைப்பு

    ''இது அளவான நாட்களில் முறையாக திட்டமிட்டு முடிக்கப்பட்ட படம்.படப்பிடிப்பை விட சந்தைப்படுத்துதலின் சிக்கல்கள்,போராட்டங்கள்,வெளியிடுதலின் சிரமங்கள் எல்லாம் அனுபவங்கள் மூலம் அறியமுடிந்தது'.'என்கிறார் இயக்குநர் கமல் சுப்ரமணியம்.

    45 நாட்களில்

    45 நாட்களில்

    பலநாட்கள் அதிகாலை முதல் நள்ளிரவு வரை படப்பதிவு முழு மூச்சுடன் நடத்தியுள்ளனர். 45நாட்களில் மொத்தப் படத்தையும் எடுத் திருக்கிறார்கள்.அந்த வகையில் இது நன்றாகத் திட்டமிடப்பட்டு அளவான நாட்களில் முறையாக முடிக்கப்பட்ட படம்

    கொடைக்கானல் மாதா கோயில்...

    கொடைக்கானல் மாதா கோயில்...

    கொடைக்கானல், குற்றாலம், அச்சன் கோவில் சென்னை, மாமல்லபுரம் கடற்கரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.கொடைக்கானலில் லாசலத் மாதா கோவில் புகழ் பெற்றது. அங்கு 1972ல் 'ஞானஓளி'படத்தின் 'தேவனே என்னைப் பாருங்கள்' பாடல் காட்சிக்கான- படப்பிடிப்பு நடந்தது. 40 ஆண்டுகளாக எந்த சினிமா படக் குழுவுக்கும் அனுமதி கிடைக்கவில்லை. 'மறுமுகம்' படக்குழு அங்கு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர்.

    தொழில் நுட்பக் கலைஞர்கள்

    தொழில் நுட்பக் கலைஞர்கள்

    க்ரைம் த்ரில்லர் கதையை இன்னும் மிரட்டலாகத் தந்துள்ளார்கள் ஒளிப்பதிவாளர் கனகராஜும் இசையமைப்பாளர் அகஸ்தியாவும். ''படத்தின் ஒளியமைப்பில் ககைராஜும் பின்னணி இசையமைப்பில் அகஸ்தியாவும் பேசப்படுவர்'' என்கிறார் இயக்குநர்.

    தணிக்கைத்துறையினர் பாராட்டு!

    தணிக்கைத்துறையினர் பாராட்டு!

    படத்தில் எந்த வெட்டும் இல்லை ஆனால் ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இல்லை என்று தணிக்கைத் துறையினர் பாராட்டினாலும், படத்தின் கதை சொல்லும் 'இப்படியும் செய்ய முடியுமா?' என்கிற கற்பனைக் கருத்து படத்தில் உள்ளது. அதற்கு விதிகளின்படி 'ஏ' சான்றிதழ்தான் கொடுக்க வேண்டியதாகிவிட்டது என்றிருக்கிறார்கள்.

    மார்ச் 14-ல் வெளியாகிறது 'மறுமுகம்'!

    English summary
    Here is the preview of Daniel Balaji starrer Marumugam, a thriller.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X