ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்... கீர்த்திசுரேஷுக்குப் பதில் பிரபல தமிழ் நடிகை!
ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் பிரியாமணி நடிக்கவுள்ளார்.
சென்னை: ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் பிரியாமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. இப்படத்தின் ஒரு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிசெய்யப்படவில்லை.

பிரியாமணி:
ஆர்ஆர்ஆர் படத்துக்கு அதிகபடியான கால்ஷீட் கொடுக்க வேண்டி இருப்பதால், கீர்த்தி இப்படத்தில் நடிக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நடிகை பிரியாமணி இப்படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோயின்?
இப்படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கிறாரா அல்லது துணை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் ராஜமௌலி தரப்பில் இருந்து பிரியாமணியிடம் பேசப்பட்டுள்ளதாக மட்டும் தெரிகிறது.

மிகப்பெரிய வாய்ப்பு:
திருமணத்திற்குப் பின், நடிகை பிரியாமணி தற்போது தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ராஜமௌலி படம் அவருக்கு பெரிய வாய்ப்பாக அமையும் என பேசப்படுகிறது.

ராம ராவண ராஜ்ஜியம்?
ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. மேலும், ஆர்ஆர்ஆர் பட தலைப்பின் விரிவாக்கம், ராம ராவண ராஜ்ஜியம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவும் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











