கோவாவில் ரஜினிகாந்த்.. இந்தியளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்!
Recommended Video
கோவா: இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பொன் விழா ஆண்டு (இன்று) நவம்பர் 20 தொடங்கி வரும் 28ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் இந்தியா விருது வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளனர்.
இணையத்தில் அவர்களது புகைப்படம் லீக்கான நிலையில், இந்தியளவில் #PrideIconofIndiaRajinikanth என்ற ஹேஷ்டேகை ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தர்பார் இசை
டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு, வரும் டிசம்பர் 6ம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களுக்காக
கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், நேற்று கோவா செல்லும் வழியில், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழக மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால், இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.
ஐகான் ஆஃப் இந்தியா
IFFI சார்பில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிளி விருது வழங்கப்பட உள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ரஜினிக்கு இந்த விருதை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பாலசந்தர் இயக்கிய இரு கோடுகள் படமும் திரையிடப்படுகிறது.
டிரெண்டிங்
சர்வதேச திரைப்பட விழாவுக்காக கோவா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் இணையத்தில் தீயாக பகிரப்பட்டு, இந்தியளவில் ட்விட்டரில் #PrideIconofIndiaRajinikanth என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. கோவா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நாளான இன்றே ரஜினிக்கு மத்திய அரசால், விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











