இந்தியாவின் பெருமை சூர்யா.. 2020ன் சிறந்த படம் சூரரைப் போற்று #PrideOfIndianCinemaSURIYA
சென்னை: இந்தியாவின் பெருமை சூர்யா என்றும் 2020ம் ஆண்டின் சிறந்த படம் சூரரைப் போற்று என்றும் சூர்யா ரசிகர்கள் #PrideOfIndianCinemaSURIYA என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்த ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களிலேயே சிறந்த படம் என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
அமேசான் பிரைமில் தீபாவளியை முன்னிட்டு வெளியான சூரரைப் போற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நெஞ்சை உருக்கும் காட்சி
சாமானிய மக்கள் கனவு காணவும், அந்த கனவை எட்டிப் பிடிக்க முயற்சி செய்யவும், சூரரைப் போற்று திரைப்படம் இன்னொரு தூண்டுகோலாக மாறி உள்ளது. ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் சுதா கொங்கரா செதுக்கி இருக்கிறார். தனது மகனை காணாமல் இறக்கும் அப்பாவின் கடைசி நேரக் காட்சி நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திடீர் டிரெண்ட்
நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் திடீரென இந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். சூர்யாவின் சூரரைப் போற்று தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படியொரு ஹாஷ்டேக் டிரெண்டை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மலையாளத்திலும் மாஸ்
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என எல்லா மொழிகளிலும் வேற லெவல் ஹிட் அடித்து வருகிறது சூர்யாவின் சூரரைப் போற்று. ஒடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிக வரவேற்பை பெற்று சூரரைப் போற்று, மிகப்பெரிய சாதனையை படைத்து இருப்பது. மற்ற பெரிய நடிகர்கள் படங்களும் ஒடிடியில் வெளியாகும் வாய்ப்பை வழி வகுத்து இருக்கிறது என மலையாளத்தின் முன்னணி நாளிதழ் சிறப்பு கட்டுரை வெளியிட்டு கவுரவப்படுத்தி இருக்கிறது.

அப்துல் கலாம் குரல்
சூரரைப் போற்று திரைப்படத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் இளைஞர்களை கனவு காணுங்கள் என ஊக்கப்படுத்திய விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அய்யாவின் காட்சி இடம்பெற்று இருக்கும். அந்த காட்சியில் அப்துல் கலாமுக்கு குரல் கொடுத்திருப்பது கலக்கப் போவது யார் புகழ் நவீன் என்கிற தகவலும் வெளியாகி வைரலாகி வருகிறது.

2020ன் சிறந்த படம்
கொரோனா கலவரத்தால் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஏகப்பட்ட பெரிய படங்கள் வெளியாகவில்லை. வெளியான சில படங்களிலும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ மை கடவுளே உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தீபாவளிக்கு வெளியான மூக்குத்தி அம்மன் படம் கமர்ஷியல் வெற்றி பெற்றாலும், 2020ல் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த படமாக சூரரைப் போற்று மாறி உள்ளதாகவும் ரசிகர்கள் பிரபலங்கள் பாராட்டி உள்ளனர். IMDB ரேட்டிங்கும் சூரரைப் போற்று படத்துக்குத் தான் அதிகம்.


Click it and Unblock the Notifications











