twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேலைக்காரன் பட ஸ்டைலில்.. டார்ச் லைட் அடிக்க தயாராகும் மக்கள்!

    |

    சென்னை : ஏப்ரல் 5 இரவு 9மணிக்கு சரியாக 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்கை அனைத்து டார்ச் லைட் அல்லது அகல் விளக்கு ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டு கொண்டுள்ளார் .

    Recommended Video

    Quarantine Cleaning Challenge | Rio Raj | Pandian Stores Kathir | Lock Down

    இதற்கு முன் மார்ச் 22 நாட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் மாலை 5 மணிக்கு தங்கள் வீட்டிலிருந்j படியே கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார தொழிலாகளர்கள் மற்றும் காவல் துறையினரை பாராட்டி கைதட்டுமாறு கேட்டு கொண்டார்.

    Prime Minister Modi asks to switch off all lights at home

    இதே போல் தற்போதும் ஏப்ரல் 5 தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடம் டார்ச்லைட் அடித்து தங்களின் ஆதரவை கொடுப்பார்கள் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது, வேலைக்காரன் படத்தை நினைவு படுத்துகிறது.

    சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில், கலபடத்திற்கு எதிராக நாம் நமது கைகளை உயர்த்த வேண்டும் அதற்கு நீங்கள் எனக்கு ஆதரவு தரவேண்டும். எனக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க விரும்பினால் இன்று இரவு 12 மணிக்கு உங்கள் வீட்டில் விளக்கை ஏற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருப்பார்.

    இந்த , காட்சி படத்தில் வரும் போது திரையரங்கில் படம் பார்த்த ரசிகர்கள் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. மேலும், திரையரங்கில் பலர் டார்ச் லைட்டை அடித்து ஆரவாரம் செய்து படத்தை கொண்டாடினர்.

    கூட்டமான பஸ்.. போருக்கு போவதற்கு சமம்.. இந்த நடிகைக்கும் அந்த கொடுமை நடந்திருக்காம்! கூட்டமான பஸ்.. போருக்கு போவதற்கு சமம்.. இந்த நடிகைக்கும் அந்த கொடுமை நடந்திருக்காம்!

    வேலைகாரன் படத்திற்கு முன்பே இந்த முறை பயன்படுத்தபட்டது ஜல்லிக்கட்டு போராட்டம் சமயத்திலும் மற்றும் விஜயின் மெர்சல் பட இசை வெளியீட்டு விழாவிலும். விஜய் ரசிகர்கள் தங்களின் தளபதியை உற்சாகப்படுத்த அனைவரும் ஒரே நேரத்தில் டார்ச் லைட் அடித்தனர் பதிலுக்கு விஜயும் தனது தொலைபேசியில் இருந்து டார்ச் லைட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    இதே போல் தற்போதும், நாடு முழுவதும் தங்களின் ஆதரவை தெரிவிக்க இரவு டார்ச் லைட் மற்றும் விளக்கு ஏற்றுமாறு பிராதமர் வேண்டுகோள்விடுத்துள்ளார். இரவு பகலாக மருத்துவர்கள், சுகாதார தொழிலாளர்கள் மற்றும் காவல்துறையினர் சேவை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த செயல் இருக்கும், இதற்கு மக்கள் நிச்சயம் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Prime Minister Modi asks to switch off all lights at home on this sunday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X