twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசு மரியாதையுடன் சிவாஜி பார்க்கில் இறுதி மரியாதை..பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

    |

    சென்னை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

    பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

    6 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஷால்!6 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஷால்!

    மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.

    காற்றில் கரைந்த கானம்

    காற்றில் கரைந்த கானம்

    கடந்த ஜனவரி 8ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் வைத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு விளைவாக அவரது உடலில் உள்ள பாகங்கள் செயலிழந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், பிப்ரவரி 6ம் தேதி (இன்று) காலை 8.12 மணிக்கு அவரது இன்னுயிர் பிரிந்தது.

    துக்கம் அனுசரிப்பு

    துக்கம் அனுசரிப்பு

    மகராஷ்ட்ரா அரசு லதா மங்கேஷ்கரின் மறைவை தொடர்ந்து இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு அறிவித்துள்ளது. முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்ய அத்தனை பணிகளையும் விரைவாக நடத்தி முடித்துள்ளது.

    ஷாருக்கான் இரங்கல்

    ஷாருக்கான் இரங்கல்

    மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் தனது கடமையை ஆற்றினார். மேலும், சில பாலிவுட் நடிகர்களும் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடி மரியாதை

    பிரதமர் மோடி மரியாதை

    டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டு வந்த பிரதமர் மோடி நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகி லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.

    மக்கள் வெள்ளம்

    மக்கள் வெள்ளம்

    லதா மங்கேஷ்கரின் வீட்டுக்கு வெளியிலே குவிந்த மக்கள் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட ஊர்தியை தொட்டு வணங்கியும் அவர் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பார்க் வரை ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு கண்ணீர் சிந்தி இன்னிசை அரசிக்கு பிரியா விடை கொடுத்தனர்.

    English summary
    Prime Minister Modi, Maharastra CM Uddav Thackeray, Bollywood actor Shah Rukh Khan pays last tribute to Iconic Singer Lata Mangeshkar Funeral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X