twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளவரசி டயானா மருமகளாகும் நடிகை

    By Siva
    |

    லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்க டிவி சீரியல் நடிகை மெகன் மார்க்கலை திருமணம் செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து இளவரசர் ஹாரி(33) அமெரிக்காவை சேர்ந்த டிவி சீரியல் நடிகை மெகன் மார்க்கலை காதலிப்பதாக பேசப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அவர்கள் கைகோர்த்து ஜோடியாக சென்றதை பார்த்தவர்கள் இது காதல் தான் என்றனர்.

    Prince Harry to marry actress Meghan Markle

    இந்நிலையில் ஹாரிக்கும், மெகனுக்கும் நிச்சியதார்த்தம் நடந்துவிட்டது என்றும் அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்கும் என்றும் அரண்மனை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஹாரி, மெகனுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு மெகன் ஹாரியுடன் இங்கிலாந்தில் வசிப்பாராம்.

    36 வயதாகும் மெகனுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். முன்னதாக அவர் கடந்த 2011ம் ஆண்டு டிரெவர் எங்கல்சன் என்பவரை திருமணம் செய்து 2013ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

    English summary
    British Prince Harry is set to marry American actress Meghan Markle in 2018. Clarence House said in a statement that the prince and the actress are engaged. The couple has got the blessings of queen Elizabeth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X