கணவரை அடித்த பிக் பாஸ் பிரபலம்: வீடியோ இதோ
மும்பை: மனைவியிடம் அடி வாங்கிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிரின்ஸ் நருலா.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டவர்கள் பிரின்ஸ் நருலா மற்றும் நடிகை யுவிகா சவுத்ரி. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது யுவிகாவுக்காக இதய வடிவில் பரோட்டா சுட்டு தனது காதலை வெளிப்படுத்தினார் பிரின்ஸ் நருலா.
அவர் செய்த விஷயத்தை தான் பிக் பாஸ் 3 தமிழில் சாக்ஷி செய்தார்.
யுவிகா
பிக் பாஸ் 9 டைட்டிலை வென்ற பிரின்ஸ் நருலா யுவிகா சவுத்ரியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர்கள் சல்மான் கான் தயாரிக்கும் தொலைக்காட்சி நடன ரியாலிட்டி நிகழ்ச்சியான நாச் பாலியே 9ல் ஜோடியாக கலந்து கொண்டு டான்ஸ் ஆட உள்ளனர்.
அடி
நாச் பாலியே நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள நிலையில் பிரின்ஸ் நருலாவும், யுவிகா சவுத்ரியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அத்தகைய பயிற்சியின்போது யுவிகா தன்னை பின்னால் இருந்து தலையில் அடித்தபோது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிரின்ஸ். அடித்தார் என்றால் செல்ல அடி தான் மற்றபடி எதுவும் இல்லை.
அனிதா
நாச் பாலியே 9 நிகழ்ச்சியில் விக்ரமின் சாமுராய் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த அனிதாவும் தனது கணவர் ரோஹித் ரெட்டியுடன் சேர்ந்து கலந்து கொள்கிறார். நாச் பாலியே நிகழ்ச்சியில் அனிதாவுக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சிலருக்கு பிடிக்கவில்லையாம்.

சல்மான் கான்
நாச் பாலியே 9 நிகழ்ச்சியில் முன்னாள் காதலர்களும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை மனிஷ் பால் தொகுத்து வழங்க உள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், பிரபல டான்ஸ் மாஸ்டர் அகமது கான் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். வேண்டும் என்றே முன்னாள் காதல் ஜோடிகளாக பார்த்து தேர்வு செய்துள்ளார்களாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.


Click it and Unblock the Notifications











