Don't Miss!
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூரிய வம்சத்தை விட விஜய் படத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தாங்க!
சென்னை : காலங்கள் கடந்தும் ரசிகர்களின் ஃபேவரைட் பட்டியலிலுள்ள பல படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்ரமன்
சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த சூரிய வம்சம் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது
இந்த நிலையில் சூரிய வம்சத்தை விட விஜய் படத்திற்கு அந்த சமயத்தில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டதாக விக்ரமன் சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்
பீஸ்ட் படத்துக்கு சிறப்பு காட்சி இல்லையா.. கொந்தளித்த விஜய் ரசிகர்கள்.. கடலூரில் சாலை மறியல்!

திருப்புமுனை படமாக
இயக்குனர் விக்ரமனின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு திரையரங்குகளில் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டதே அதே அளவிற்கு குடும்ப ரசிகர்களின் மனதிலும் முதல் இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் விக்ரமன். புது வசந்தம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்ரமனுக்கு அடுத்தடுத்து வெளியான படங்களும் வெற்றிகளை அடைந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக விக்ரமனுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது அனைத்து கிளாஸ் ஆடியன்ஸையும் கவர்ந்த இந்த படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

அப்பா-மகன் வேடத்தில்
நாட்டாமை என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த நடிகர் சரத்குமார் அப்பொழுது இரட்டை வேடங்களில் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் சூரியவம்சம். பொதுவாக அனைத்து மிடில் கிளாஸ் குடும்பத்தில் நடக்கக்கூடிய அப்பா மகன் பிரிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை அனைத்து ரசிகர்களும் கொண்டாடினர்.

மோட்டிவேஷன் படமாக
சூரியவம்சம் விக்ரமனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது ஏன் இன்றைய தலைமுறையினருக்கும் காலங்கள் கடந்து பல ஜென்ரேஷன்களுக்கு மிகப்பெரிய மோட்டிவேஷன் படமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சூரிய வம்சம் படத்தில் நடந்த சுவாரசிய தகவல் ஒன்றை இயக்குனர் விக்ரமன் பகிர்ந்துள்ளார். அப்பொழுது சூப்பர் குட் பிலிம்ஸ் சூரிய வம்சம் மற்றும் லவ் டுடே என இரண்டு படங்களை ஒரே சமயத்தில் தயாரித்து வந்தது. சூரிய வம்சம் படத்தை விக்ரமன் இயக்கி வந்தார். லவ் டுடே படத்தை பாலசேகரன் இயக்கி வந்தார் இது அவருக்கு அறிமுகம் படமாகும் .

விஜய் படத்திற்கு முக்கியத்துவம்
எனவே இரண்டு படத்திற்கும் ஜெய்சங்கர் படத் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பொதுவாக விக்ரமனின் அனைத்து படங்களுக்கும் எடிட்டராக பணி புரிந்துள்ள ஜெய்சங்கர் சூரிய வம்சம் படத்தையும் எடிட் செய்து வந்தார். சூரிய வம்சம் மற்றும் லவ் டுடே என இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டியது இருந்ததால் சூரியவம்சம் 90% எடிட்டிங் முடிந்தபிறகு தன்னுடைய உதவியாளர்களை வைத்து மீதமுள்ளவற்றை எடிட் செய்ய சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி செளத்ரி கூறியுள்ளார். எனவே சூரிய வம்சத்தை விட விஜய்யின் லவ் டுடே படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்ற சுவாரஸ்ய தகவலை இயக்குனர் விக்ரமன் பகிர்ந்துள்ளார்.