Thalaivar 171 - தலைவர் 171ல் வில்லன் இவரா?.. ஃபகத் பாசிலுக்கு டாட்டா சொன்ன லோகேஷ் கனகராஜ்?
சென்னை: Thalaivar 171 (தலைவர் 171) தலைவர் 171ல் வில்லன் கேரக்டரில் நடிக்கவிருக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன்பு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு அண்மையில் ஷூட்டிங்கும் தொடங்கியது. முதல் ஷெட்யூல் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. திருவனந்தபுரம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படம் கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக பிரமாண்டமாக வெளியாகும் என்று கூறியிருந்தார்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் வழக்கம்போல இசையமைக்கிறார். முதன்முறையாக ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்திருப்பதால் இருவரும் எப்படி நடிப்பார்கள் என்று ரசிகர்கள் இப்போதே கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.
தலைவர் 171: தலைவர் 170ஐ முடித்துவிட்டு ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. லோகேஷின் இயக்கத்தில் நேற்று வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. முக்கியமாக படத்தில் வில்லன் கேரக்டருக்கு லோகேஷ் கனகராஜ் எந்த வெயிட்டேஜும் கொடுக்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.
வில்லன் இவரா?: இந்நிலையில் தலைவர் 171ல் வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கவிருக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் விக்ரம் படத்தில் ஏற்கனவே ஃபகத் பாசில் நடித்திருப்பதாலும் தமிழில் தொடர்ந்து வில்லனாக நடித்து வருவதால் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும் என்று முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது பிருத்விராஜை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இதற்கான அனுமதியை ரஜினியும் கொடுத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. பிருத்விராஜ் தற்போது சலார் படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே கனா கண்டேன் படத்தில் வில்லனாக பிருத்வி ராஜ் மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











