அமலா பால் மேல.. பிருத்விராஜ் கீழே.. அழ வைக்கும் ஆடுஜீவிதத்தில் கொஞ்சம் அழகியலும் இருக்கு!
சென்னை: பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாறன், அமலா பால் நடிப்பில் பல ஆண்டுகளாக உருவாகி வந்த "ஆடுஜீவிதம்" திரைப்படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களிலும் ஆடு ஜீவிதம் படம் பங்கேற்றுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரெய்லரை தற்போது ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாலை வனத்தில் சிக்கித் தவிக்கும் பிருத்விராஜ் எப்படி சர்வைவ் பண்ணுகிறார் என்கிற கதையை படமாக்கி உள்ளனர்.

"ஆடுஜீவிதம்" எனும் நாவல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்த ஒன்று அதனை மையப்படுத்தி பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கி உள்ளார்.
ஆடு ஜீவிதம் டிரெய்லர்: பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடித்துள்ள "ஆடுஜீவிதம்" படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கங்களில் "ஆடுஜீவிதம்" படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். வேலை காரணமாக வெளியூருக்குச் செல்லும் பிருத்விராஜ் தனது மனைவி அமலா பாலை பிரிந்து விட்டு பாலை வனத்தில் சிக்கித் தவிக்கும் அவஸ்த்தை நிறைந்த வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
உயிரை கொடுத்து நடித்துள்ள பிருத்விராஜ்: "ஆடுஜீவிதம்" படத்திற்காக உடல் மெலிந்து ஐ விக்ரம் போல ஓடாக தேய்ந்து உடலை வருத்திக் கொண்டு பிருத்விராஜ் இதுவரை இல்லாத அளவுக்கு கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்துள்ளார். கண்டிப்பாக இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமலா பால் மேலே: "ஆடுஜீவிதம்" டிரெய்லர் முழுக்கவே மண் புழுதி பறக்க மரியான் படத்தில் தனுஷ் இருந்தது போல பார்க்கவே முடியாத அளவுக்கு ஆட்டு மந்தையுடன் அழுக்கு படர்ந்த சட்டையுடன் அகோரி போல மாறி காட்சியளிக்கிறார். இந்த டிரெய்லரில் அமலா பால் வரும் காட்சிகள் மட்டுமே கண்களுக்கு குளிர்ச்சியாக அழகியலாக தெரிவதாக ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். இந்த படத்துக்கு பிறகு அமலா பாலுக்கு மீண்டும் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஆஸ்கர் செல்லுமா?: "ஆடுஜீவிதம்" படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோர் பணியாற்றி உள்ளனர். இந்த படத்தின் கதை மிகவும் வலிமையான ஒன்று என்பதால், நிச்சயம் அடுத்த ஆண்டு ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது ரிலீஸ்: "ஆடுஜீவிதம்" படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல பெரிய படங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளியீட்டை தவிர்த்து வரும் நிலையில், மார்ச் 28ம் தேதியே இந்த படத்தை ரிலீஸ் செய்ய பிருத்விராஜ் முடிவு செய்துள்ளார். மலையாளத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்கள் குவிந்து வரும் நிலையில், அடுத்து ஆடு ஜீவிதம் வெளியானால் மீண்டும் ஒரு மிகப்பெரிய வரவேற்பை மலையாள திரையுலகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











