Prithviraj: அடக்கடவுளே.. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே.. பிரித்விராஜுக்கு அறுவை சிகிச்சை
திருவனந்தபுரம்: தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் சியான் விக்ரமுக்கு விலா எலும்பில் அடிப்பட்டு சில மாதங்கள் ஓய்வெடுத்து வரும் சூழலில் அதே போல மலையாள நடிகர் பிரித்விராஜுக்கு ஷூட்டிங்கின் போது பலத்த அடிப்பட்டு தற்போது மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார்.
பிரபாஸின் சலார் படம், மலையாளத்தில் விலையாத் புத்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரித்விராஜ்.
விலாயத் புத்தா படத்தில் நடித்து வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக நடைபெற்ற விபத்தில் நடிகர் பிரித்விராஜுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் பிரித்விராஜ்: தமிழில் மொழி, ராவணன், கனா கண்டேன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் நடித்த அய்யப்பனும் கோஷியும், ஜன கண மண உள்ளிட்ட பல படங்கள் ஏகப்பட்ட இந்திய ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
மலையாள சினிமாவைத் தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் பிரித்விராஜ் அதிக படங்களில் நடித்து வருகிறார். அவர் மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
பிரபாஸுக்கு வில்லன்: கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்க பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் சலார் படத்தில் வில்லனாக பிரித்விராஜ் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் அந்த படம் வெளியாக உள்ளது.
மேலும், அடுத்ததாக விலாயத் புத்தா எனும் மலையாள படத்தில் பிரித்விராஜ் நடித்து வந்த நிலையில், ஏற்பட்ட விபத்தில் அவரது காலில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது.
சில மாதங்கள் ஓய்வு: Key Hole சர்ஜரியை மருத்துவர்கள் இன்று நடிகர் பிரித்விராஜுக்கு செய்துள்ளனர். அதுதொடர்பாக தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஆம்.. நீங்க கேள்விப் பட்டதை போலவே எனக்கு சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அடிப்பட்டது.
மருத்துவர்கள் கீ ஹோல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். அதன் காரணமாக சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், நான் இந்த ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவேன். மேலும், நிச்சயம் சீக்கிரம் முயற்சித்து மீண்டும் ஆக்ஷனில் களமிறங்குவேன் என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வருத்தம்: நடிகர் பிரித்விராஜுக்கு இப்படி நேர்ந்து விட்டதே என நினைத்து அவரது ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்து வருகின்றனர். மேலும், கெட் வெல் சூன் மெசேஜ்களையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மோகன்லாலை வைத்து லூசிஃபர் 2 (எம்புரான்) படத்தையும் பிரித்விராஜ் இயக்கி வரும் நிலையில், இப்படி ஆகிவிட்டதே என மோகன்லால் ரசிகர்களும் இவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். லோகி வெர்ஸிலும் இடம்பெற ஆசையுடன் இருந்த பிரித்விராஜுக்கு அடிப்பட்ட நிலையில், எல்சியூவில் அவர் இப்போதைக்கு இணைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
பிரித்விராஜின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ் பல பிரபலங்களும், ரசிகர்களும் சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள் என்றும் உடல் நலத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











