ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு.. வில்லனாக நடிக்கப் போகும் முன்னணி ஹீரோ.. யாரு தெரியுமா?
சென்னை: தெலுங்கு திரை உலகில் அடுத்தடுத்து பான் இந்தியா நடிகர்களை உருவாக்கி வருகிறார் இயக்குநர் ராஜமௌலி. பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் வரிசையில் அடுத்ததாக மகேஷ்பாபுவை ராஜமெளலி இயக்க காத்திருக்கிறார். அந்த படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகேஷ் பாபுவும் கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளார். சமீபத்தில் அலுமினியம் ஃபேக்டரி ஒன்றை ராஜமௌலி லீசுக்கு எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அவதார் படங்களை எடுப்பதற்காக பல ஏக்கர் நிலங்களை இதே போல ஜேம்ஸ் கேமரூன் சொந்தமாகவே வாங்கி படப்பிடிப்பை நடத்தினார். அதே பாணியை கையிலெடுத்து மகேஷ் பாபு படத்துக்காக ராஜமவுலி மிகப்பெரிய சண்டைக்காட்சி நடத்த அங்கே திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர். மேலும், அமேசான் காடுகளிலும் படப்பிடிப்பை நடத்த ராஜமெளலி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், மகேஷ் பாபுக்கு வில்லனாக இந்த படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மாஸ் காட்டும் பிரபாஸ்: ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி படங்களில் நடித்து மிகப்பெரிய வரலாற்று வசூல் வேட்டையை நடத்திய பிரபாஸ் தற்போது பான் வேர்ல்ட் நடிகராகவே மாறிவிட்டார். இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் அவரது படங்களை ஏகப்பட்ட ரசிகர்கள் பல நாடுகளில் இருந்தும் பார்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் ஆரம்ப விதை போட்டது ராஜமெளலி தான். பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் 5 நாட்களில் 600 கோடிக்கும் அதிகமான வசூலை கடக்கவும் அதுதான் காரணம். பிரபாஸை தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோரும் பான் இந்தியா நடிகர்களாக உருவாகி உள்ளனர்.
அடுத்து மகேஷ் பாபு தான்: அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் மூலம் ராஜமெளலியின் உதவி இல்லாமலே பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். இந்நிலையில், மகேஷ் பாபு ராஜமெளலி படத்தில் நடித்து நாமும் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி சாதனையை படைக்க வேண்டும் என்கிற முயற்சியில் அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க தன்னை அர்பணித்து விட்டார்.
வில்லன் யாரு?: ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு ஹீரோயினாக இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த மாடல் அழகியை எல்லாம் இறக்கப் போறாரு ராஜமெளலி என்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கப் போறாங்க என்றெல்லாம் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில், மகேஷ் பாபுவுக்கு வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்கப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

பான் இந்தியா வில்லன்: பகத் பாசில், விஜய் சேதுபதி போல பிருத்விராஜும் பான் இந்தியா வில்லனாக மாறி வருகிறார். சலார் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடித்த பிருத்விராஜ் படே மியான் சோட்டே மியான் படத்தில் அக்ஷய் குமாருக்கு வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிருத்விராஜ் நடிக்கப் போகிறார் என்கின்றனர். விரைவில் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜமெளலி வெளியிடுவார் என தெரிகிறது. பிருத்விராஜ் வில்லனாக நடித்தாலும், ஹீரோவுக்கு இணையான முக்கியத்துவத்தை ராஜமெளலி கொடுப்பார் என்பது தெரிந்த விஷயம் தான். 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் படத்தை உருவாக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











