மிரட்டலாக வெளியான எம்புரான் டீசர்.. ரிலீஸ் டேட்டை அறிவித்த டீம்.. பிரித்விராஜ் -மோகன்லால் சம்பவம்!
திருவனந்தபுரம்: நடிகர் பிரித்விராஜ் நடிப்பு, தயாரிப்பு என அடுத்தடுத்த தளங்களில் தன்னை வெளிப்படுத்திவரும் நிலையில் இயக்குநராகவும் அவர் சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் மோகன்லாலை வைத்து அவர் முன்னதாக கொடுத்திருந்தால் லூசிபர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை மிரட்டியது.
இந்நிலையில் லூசிபர் படத்தின் இரண்டாவது பாகமாக எம்ரான் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் பிருத்விராஜ். லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 27ம் தேதி ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதையொட்டி பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் மம்முட்டி, மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

எம்புரான் படம்: நடிகர் மோகன்லால்: நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தை இயக்கியிருந்தார் பிரித்விராஜ்/ இந்த படம் மோகன்லால் கேரியர் பெஸ்ட்டா அமைந்தது. மிரட்டலான கதைக்களம் மற்றும் திரைக்கதையால் இந்த படத்திற்கு மிகப்பெரிய வலுவை சேர்த்திருந்தார் பிரித்விராஜ். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகமாக தற்போது எம்புரான் படத்தை இயக்கி முடித்துள்ளார். லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படத்தை ஃபான் இந்தியா படமாக இயக்குநர் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதி அறிவிப்பு: மேலும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். வரும் மார்ச் மாதம் 27ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது வெளியாகி உள்ள டீசர் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. லூசிபர் படத்தில் மோகன்லாலின் உதவியாளர் சையத்தாக நடித்திருந்தார் பிரித்விராஜ். இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள எம்புரான் படத்திலும் அவர் முக்கியமான கேரக்டரில் இணைந்துள்ளார். இந்த படத்தின் கதைக்களமும் மிகச் சிறப்பாக அமையும் என்பதை தற்போது வெளியாகியுள்ள டீசர் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளது. பல இடங்களில் ரசிகர்களை இந்த டீசர் வாவ் சொல்ல வைத்துள்ளது.

பிரித்விராஜ் மகிழ்ச்சி: எம்புரான் படம் ரிலீசாகி மிகப்பெரிய மாஸ் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதனிடையே இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ள டீசர் ரிலீஸ் நிகழ்ச்சியில் மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் மம்முட்டி, மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளும் இணைந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பிரித்விராஜினி மனைவியும் இணைந்திருந்தார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் எம்புரான் படத்தின் இயக்குநருமான பிரித்விராஜ், தான் இயக்குநரானது தன்னுடைய மனைவி மற்றும் மகளுக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
வருத்தத்தில் பிரித்விராஜ் மனைவி & மகள்: இயக்கத்திற்காக அதிகமான மெனக்கெடல்களை செய்ய வேண்டியுள்ளதால் தான் குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்றும் இதனால் தன்னுடைய மனைவி மற்றும் மகள் இருவரும் வருத்தத்திற்கு உள்ளாவதாகவும் அவர் கூறியுள்ளார். இருந்தபோதிலும் தன்னை புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்துவரும் அவர்களுக்கு தன்னுடைய நன்றியையும் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உற்சாகத்தை பகிர்ந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











