பிரபாஸ் படத்தில் நடிக்க அந்தவொரு கண்டிஷன் மட்டும் தான் போட்டேன்.. நடிகர் பிருத்விராஜ் ஓப்பன் டாக்!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிருத்விராஜ் பிரபாஸின் சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதை உறுதிப்படுத்தி உள்ளார்.
Recommended Video
கேஜிஎஃப் படங்களை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் பிரபாஸ் 'சலார்' எனும் படத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடித்து வருகிறார்.
சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில், பிருத்விராஜ் இந்த படத்தில் இணைய போட்ட ஒரு கண்டிஷன் பற்றி பேசியிருப்பது டிரெண்டாகி வருகிறது.

ஜன கண மன ஹீரோ
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் பிருத்விராஜ். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும், ஜன கண மன உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. வித்தியாசமான கதைகளையும் ரொம்ப போல்டான படங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் பிருத்விராஜ் அடுத்ததாக கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் படத்தில் இணைந்துள்ள அறிவிப்பு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிரபாஸ் படம்
பாகுபலி படத்திற்கு பிறகு பிரம்மாண்ட பட்ஜெட் படங்களிலேயே பிரபாஸ் நடித்து வருகிறார். கேஜிஎஃப் படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்தியாவையே கன்னட திரையுலகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் எனும் படத்தில் Most Dangerous Man கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்நிலையில், அவருடன் இணைந்து மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் நடிக்க உள்ளார் என்பதை பிருத்விராஜே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நோ சொல்ல முடியாது
மொழிகளை கடந்து இந்திய சினிமா என்கிற ஒற்றுமையில் மற்ற மொழி நடிகர்கள் பிற மொழி படங்களில் வில்லனாகவும், துணை நடிகராகவும் நடித்து படத்திற்கான வெயிட்டேஜ்ஜை சேர்த்து வருகின்றனர். விக்ரம் படத்தில் பகத் ஃபாசில் நடித்த நிலையில், கேஜிஎஃப் 2 படத்தில் சஞ்சய் தத், ரவீணா டாண்டன் நடித்தது போல தற்போது சலார் படத்தில் மலையாள நடிகரான பிருத்விராஜை முக்கியமான கதாபாத்திரத்திற்கு இயக்குநர் பிரசாந்த் நீல் அணுக, "இது பிரபாஸ் படம் நோ சொல்ல முடியாது.. ஓகே சொல்லிட்டேன்" என அந்த படத்தில் இணைந்தது குறித்து பேட்டி ஒன்றில் பிருத்விராஜ் ஓப்பன் செய்துள்ளார்.
ஒரே ஒரு கண்டிஷன்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நடிக்க ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டுக் கொண்டேன் என்றும் பிருத்விராஜ் ரிவீல் செய்திருக்கிறார். எத்தனை மொழிகளில் படத்தை வெளியிட்டாலும், அத்தனை மொழிகளிலும் சொந்த குரலிலேயே டப்பிங் பேசி விடுகிறேன். அது சுமராக இருந்தாலும், எத்தனை முறை பேச சொன்னாலும் பேசி நடிக்கிறேன் என சொன்னதும், பிரசாந்த் நீல் சிரித்து விட்டு நீங்க வந்தா மட்டும் போதும் எனக் கூறியிருக்கிறாராம். பிரபாஸுக்கு வில்லனாக பிருத்விராஜ் நடிக்கப் போகிறாரா? இல்லை என்ன மாதிரியான ரோல் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications