சேர்ந்தாச்சு..! 14 நாள் குவாரைன்டைனுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த பிரபல ஹீரோ.. ஹேப்பி போஸ்ட்!
சென்னை: நடிகர் பிருத்விராஜ், 14 நாள் தனிமைப்படுத்துதல் முடிந்து தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
பிரபல மலையாள ஹீரோ பிருதிவிராஜ், ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிளஸ்சி இயக்குகிறார்.
இதில் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினீத் ஶ்ரீனிவாசன், லக்ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஜோர்டானில் படப்பிடிப்பு
இந்தப் படத்தின் கதை வெளிநாட்டில் பாலைவனத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதன் படப்பிடிப்பை ஜோர்டானில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட இந்தப் படக்குழு கடந்த மார்ச் மாதம் ஜோர்டான் சென்றது.

கொரோனா தீவிரம்
அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதுதான், கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்தது. ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள, அந்நாடு அனுமதி அளித்திருந்தது. பின்னர் அங்கு கொரோனாவுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதால், படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது.

மீண்டும் ஷூட்டிங்
இதனால் படக்குழு இந்தியா திரும்ப முடிவு செய்தது. ஆனால், சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு விட்டதால் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர், இந்தப் படக்குழு ஷூட்டிங்கை அங்கு மீண்டும் ஆரம்பித்து முடித்தது. இந்நிலையில் ஜோர்டானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா திரும்பினார்.

தனிமைப்படுத்துதல்
கொச்சி விமான நிலையம் வந்த அவர்கள் அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டனர். நடிகர் பிருத்விராஜ் கொச்சியில் உள்ள ஓல்ட் ஹார்பர் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்தபின் கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டுக்கு வந்தார். அங்கும் 7 நாள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

குடும்பத்துடன் இணைந்தார்
இந்நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து குடும்பத்துடன் அவர் இணைந்துள்ளார். இதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் பிருத்விராஜ். அதில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.
Recommended Video

துல்கர் சல்மான்
இதையடுத்து, பிரபல மலையாள நடிகர்கள் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், மேலும் சில நடிகைகள் உட்பட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் பிருத்வி ராஜ். ஆயிரக்கணக்கான ரசிகர்களும், பாதுகாப்பாக இருங்கள் என்று அவருக்கு வாழ்த்த்துக்களை கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











