வெள்ளத்தில் மிதந்த நடிகர் ப்ரித்விராஜ் வீடு: சினிமா பாணியில் அவர் அம்மா மீட்பு
கொச்சி: நடிகர் ப்ரித்விராஜின் வீடு வெள்ளத்தில் மூழ்கியது. அவரின் அம்மாவை 4 பேர் சேர்ந்து மீட்டுள்ளனர்.
கேரளாவில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 75 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வெள்ளம்
நடிகர் ப்ரித்விராஜின் வீடு கொச்சியில் உள்ளது. கொச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. ப்ரித்விராஜின் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. அவர் வீடு வெள்ளத்தில் மிதக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

மீட்பு
ப்ரித்விராஜின் அம்மாவும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை 4 பேர் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். அவரை பெரிய பாத்திரத்தில் அமர வைத்து வீட்டில் இருந்து வெளியே தூக்கி வந்துள்ளனர். அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
வேண்டுகோள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மலையாளம், தமிழ் திரையுலக நடிகர்கள் நிவாரண உதவி அளித்துள்ளனர். மேலும் கேரள மக்களுக்கு உதவி செய்யுமாறு மலையாள நடிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் அவசர உதவி எண்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
துல்கர் சல்மான்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு டீ, பிஸ்கட், பிரெட், போர்வை, நாப்கின், குழந்தைகள் அணியும் உடை இருந்தால் அளிக்குமாறு துல்கர் சல்மான் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். வெள்ளம் குறித்து அவர் சமூக வலைதளத்தில் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











