விரைவில் ரீமேக் ஆகும் ப்ருத்விராஜின் மெகா ஹிட் படம்
கொச்சி : ரோஷன் ஆன்ட்ரீவ்ஸ் இயக்கிய மும்பை போலீஸ் படம் ரிலீசாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தை விரைவில் ரீமேக் செய்ய உள்ளதாக ரோஷன் அறிவித்துள்ளார். ஆனால் எந்த மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

மும்பை போலீஸ் படத்தின் சில ஸ்டில்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ரோஷன், இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், மும்பை போலீசின் 8 வது ஆண்டு. உங்களுடன் சில சிறப்பான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன். இப்போது வரை இந்த படத்தை பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் இந்த படத்தை ரீமேக் செய்ய உள்ளோம். விரைவில் விபரங்களை வெளியிடுகிறோம். காத்திருங்கள் என ரோஷன் குறிப்பிட்டுள்ளார். மும்பை போலீஸ் படத்தில் ப்ருத்விராஜ், ஜெயசூர்யா, ரகுமான் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
பாக் ஆபீஸில் வசூலை அள்ளிக் குவித்ததுடன், மற்ற படங்களின் வசூலையும் கடுமையாக பாதித்த படம் இது. விசாரணை நடத்தும் போலீசை பற்றிய திரில்லர் கதை இது. இந்த படத்தை நிசாத் ஹனீபா தயாரித்திருந்தார்.
கோலிவுட்டில் முதல் முறையாக, மஞ்சு வாரியர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை ரீமேக் செய்து தமிழுக்கு அறிமுகம் செய்ய நினைத்தார் ரோஷன். ஆனால் அதில் குழப்பங்கள் ஏற்பட்டதால் மும்பை போலீஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரோஷன் இயக்கி உள்ள போலீஸ் கதையான சல்யூட் ரிலீசிற்காக காத்திருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் துல்கார் சல்மான் ஹீரோவாக நடித்துள்ளார்


Click it and Unblock the Notifications











