மஞ்சுமெல் பாய்ஸ் தான் இங்கே.. கேரளாவில் விஜய் படங்கள் பண்ண ரெக்கார்டு எல்லாம்.. பிருத்விராஜ் பளிச்!

சென்னை: மலையாள திரையுலகத்திற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பொன்னான ஆண்டாக அமைந்துள்ளது. ஜனவரி மாதம் 26ம் தேதி மோகன்லால் நடித்து வெளியான பிரம்மாண்ட திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், டல்லடித்த மலையாள சினிமா பிப்ரவரி மாதம் பிரேமலு வந்த உடனே பிக்கப் ஆனது.

பிரேமலு படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் ஹாரர் கதைக்களத்தில் மிரட்டியது. அந்த படத்தைத் தொடர்ந்து வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி 50 கோடி வரை வசூல் செய்தது.

Prithviraj says Manjummel Boys only hit in Tamil Nadu but Vijay s movies collects huge in Kerala

சொதப்பும் தமிழ் சினிமா: ஆனால், அப்படியே இந்த பக்கம் பார்த்தால் பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய் நடித்த மிஷன் 1, விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ், ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம், ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் என வரிசையாக சொதப்பி விட்டன. மலையாள திரையுலகில் அடுத்து பிருத்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் பான் இந்தியா படமாக வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தை தமிழிலும் பயங்கரமாக அவர் புரமோஷன் செய்து வருகிறார்.

ஆடுஜீவிதம்: பிளெஸி இயக்கத்தில் உயிரைக் கொடுத்து பிருத்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தில் பிருத்விராஜ், அமலா பால், வினித் ஸ்ரீனிவாசன், ஜிம்மி ஜீன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரசூல் பூக்குட்டி சவுண்ட் மிக்சிங் செய்திருக்கிறார். அந்த படத்தின் புரமோஷனின் போது பேசிய பிருத்விராஜின் வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

மஞ்சுமெல் பாய்ஸ் மட்டும்தான்: மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 50 கோடி வசூல் ஈட்டிய நிலையில், ஓடிடி மீது குறை சொல்லிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவினர் திடீரென மலையாள படங்கள் மீது குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர். ஆனால், இந்த ஒரு படம் தான் இங்கே ஓடியது. விஜய் நடித்த பல படங்கள் கேரளாவில் எப்படி ஓடுகிறது தெரியுமா என பிருத்விராஜ் பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Prithviraj says Manjummel Boys only hit in Tamil Nadu but Vijay s movies collects huge in Kerala

லியோவுக்கு டிக்கெட்டே கிடைக்கல: சில மாதங்கள் முன்னர் தான் விஜய்யோட லியோ படம் வெளியாகி கேரளாவில் சக்கைப் போடு போட்டது. சாதாரண ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவே 2 வாரங்கள் ஆகி விட்டன என பிருத்விராஜ் பேசியுள்ளார். ஒரு படம் ஓடுனதுக்கு இப்படி பார்க்குறீங்க, அங்கே கேரளாவில் ஒவ்வொரு தமிழ் படங்களும் நல்லாத்தான் ஓடி வருகிறது என பேசியுள்ளார்.

ஆடுஜீவிதம் சாதனை படைக்குமா?: பிருத்விராஜ் தனது உடல் பொருள் ஆவி எல்லாம் கொடுத்து நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் பல விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த படம் மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு படங்களை போல 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டுமா என்பது விரைவில் தெரிந்து விடும். கடைசியாக பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்த பிருத்விராஜ் 700 கோடி வசூலை ருசி பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X