திருமண நாளில் பிரிந்து இருக்கிறோம்.. சீக்கிரம் வாருங்கள்.. ப்ரித்விராஜின் மனைவி ட்விட் !
சென்னை : நடிகர் ப்ரித்விராஜ் மற்றும் சுப்ரியா தம்பதியினருக்கு இன்று 9வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். ப்ரித்விராஜ் ஜோர்டனில் மாட்டி கொண்டிருப்பதால் தனி தனியே தங்களின் திருமண நாள் வாழ்த்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
Recommended Video
நடிகர் ப்ரித்விராஜ் 9வருடத்திற்கு முன்பு சுப்ரியா மேனனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமே ரசிகர்களுக்கு சொல்லபடாமல் ரகசியமாக நடத்தபட்டு பின்பு சர்ப்ரைஸாக கூறபட்டது. ஒவ்வொரு வருடமும் திருமண நாளை விமர்சையாக கொண்டாடுவார்கள். ஆனால் இந்த முறை அவ்வாறு கொண்டாடவில்லை.

நடிகர் ப்ரித்விராஜ் ஆடுஜீவிதம் படத்திற்காக படக்குழுவுடன் ஜோர்டன் சென்ற போது அங்கு தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அங்கு மாட்டிக்கொண்டார். படப்பிடிப்பு நின்றதோடு படக்குழுவும் நாடு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில வாரங்களாக ப்ரித்விராஜ் ஜோர்டனிலேயே இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கல்யாண நாளான ப்ரித்விராஜ் சரியாக 12 மணிக்கு தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி இந்த நாளில், நாங்கள் தனிதனியே இருக்கிறோம் ஆனால் வாழ்க்கை முழுக்க இது நடக்காது என்று மனம் தளராமல் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரது மனைவி சுப்ரியாமேனனும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ப்ரித்விராஜை திருமணம் செய்து கொண்ட போது எடுக்கபட்ட புகைப்படத்தை பதிவேற்றி இத்தனை வருடங்களில் முதல்முறையாக நாங்கள் திருமண நாளில் பிரிந்து இருக்கிறோம் சீக்கரம் திரும்பி வாருங்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு நெகிழ்ச்சியான நிகழ்வாய் தற்போது சமூக வலைத்தளத்தில் பார்க்கப்பட்டு வருகிறது. பல பிரபலங்களும் இணையத்தின் வாயிலாக இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











