பிருத்விராஜ்ஜின் ‘தீர்ப்பு’ திரைப்படம் சுத்தமா ஒர்க் அவுட் ஆகலையா?: நெட்டிசன்களின் ட்விட்டர் ரிவிவ்யூ
திருவனந்தபுரம்: பிருத்விராஜ் நடித்துள்ள 'தீர்ப்பு' என்ற மலையாள திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ரத்தீஷ் அம்பட் இயக்கியுள்ள 'தீர்ப்பு' படத்தில் இந்திரஜித் சுகுமாறன், சித்திக், ஷாஜி குரூப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரித்விராஜ்ஜின் கடுவா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கடுவா ப்ளாக் பஸ்டர் ஹிட்
மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜ், தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக இருக்கிறார். கடந்த மாதம் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான கடுவா திரைப்படம், மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. திரையரங்குகளில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கடுவா, தற்போது அமேசான் ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பிருத்விராஜ் நடித்துள்ள 'தீர்ப்பு' படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ப்ளாக் காமெடியில் தீர்ப்பு
'கம்மார சம்பவம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரத்தீஷ் அம்பட், தீர்ப்பு படத்தை இயக்கியுள்ளார். பிருத்விராஜ்ஜுடன் இந்திரஜித் சுகுமாறன், மம்முகோயா, சித்திக், ஷாஜி குரூப், இஷா தல்வார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 'தீர்ப்பு' திரில்லர் பின்னணியில் ப்ளாக் காமெடி படமாக உருவாகியுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், மலையாள ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை என சொல்லப்படுகிறது.

தீர்ப்பு ட்விட்டர் விமர்சனம்
பிருத்விராஜ்ஜின் தீர்ப்பு திரைப்படம் குறித்து நெட்டிசன்கள் ட்வீட்டரில் விமர்சனங்களை தெறிக்க விடுகின்றனர். தீர்ப்பு திரில்லர் ஜானரில் இருந்தாலும், எதிர்பார்த்த அளவில் விறுவிறுப்பு இல்லையென கூறி வருகின்றனர். இன்னும் சிலர், படத்தில் இடம்பெற்றுள்ள ப்ளாக் காமெடிகள் ரசிக்கும்படி உள்ளன. அதேபோல், பிருத்விராஜ் மீண்டும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

தரமான மேக்கிங் இருக்கு
'தீர்ப்பு' படத்தின் கதை, திரைக்கதையில் பல குறைகள் இருந்தாலும், மேக்கிங் மிரட்டலாக உள்ளது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தீர்ப்பு ரொம்பவே சராசரியான படம் தான் என்றும் விமர்சனம் செய்துள்ளனர். படத்தின் மேக்கிங் மாதிரி திரைக்கதையும் நன்றாக இருந்திருந்தால், படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஓடிடியில் ரிலீஸ் செய்திருக்கலாம்
பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமாறன், மம்முக்கோயா, சித்திக், ஷாஜி குரூப் என திறமையான நடிகர்கள் இருந்தும், தீர்ப்பு திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என தெரிகிறது. மேலும், 'கடுவா' படத்தைப் போல எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு, தீர்ப்பு ஏமாற்றமாகவே அமந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் சில நெட்டிசன்கள், தீர்ப்பு படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











