twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் படக்குழு... ஜோர்டானில் இருந்து பிரபல ஹீரோ உருக்கமான போஸ்ட்!

    By
    |

    சென்னை: ஜோர்டானில் தங்கள் படக்குழு சிக்கிக்கொண்டதாக நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

    தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள ஹீரோ பிருத்விராஜ்.

    இவர் இப்போது, ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார்.

     கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மேலும் ஒரு நடிகர் திடீர் உயிரிழப்பு.. திரையுலகில் தொடரும் அதிர்ச்சி! கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மேலும் ஒரு நடிகர் திடீர் உயிரிழப்பு.. திரையுலகில் தொடரும் அதிர்ச்சி!

    அமலா பால்

    அமலா பால்

    இது நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்துக்காக, தனது உடல் எடையை கடுமையாகக் குறைத்துள்ளார், நடிகர் பிருத்விராஜ். இதில் அமலா பால், வினீத் ஶ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லக்‌ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

    பாலைவனம்

    பாலைவனம்

    மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் தந்தை கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட இந்தப் படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன், ஷூட்டிங்கிற்காக ஜோர்டான் சென்றது. அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்ததுகொண்டிருந்த போதுதான், கொரோனா தீவிரம் அடைந்தது.

    பிருத்விராஜ் தகவல்

    இந்நிலையில் இந்திய தூதரகத்தின் மூலம் சிறப்பு அனுமதி பெற்று ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள, அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தீவிரம் காரணமாக, அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாகவும் இந்தியா திரும்ப விரும்புவதாகவும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

    சோதனை

    சோதனை

    இதுபற்றி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 ஆம் தேதி எங்கள் படத்தின் ஷூட்டிங், ஜோர்டானில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிறகு நடந்த பரிசோதனைக்குப் பிறகு நாங்கள் பாதுகாப்பாகப் படப்பிடிப்பை நடத்துகிறோம் என்று தெரிந்ததும் எங்கள் ஷூட்டிங் தொடர அனுமதி அளிக்கப்பட்டது.

    இரண்டாவது வாரம்

    இரண்டாவது வாரம்

    ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஜோர்டானில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இதன் காரணமாக, கடந்த 27 ஆம் தேதி எங்கள் ஷூட்டிங் அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால், வாடி ரம் பாலைவனத்தில் உள்ள முகாமில் எங்கள் குழு தங்க வேண்டி வந்தது. ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை, படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்ததால், அதற்கான உணவு, தங்குமிடம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    திரும்ப வேண்டும்

    திரும்ப வேண்டும்

    எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் 72 மணி நேரத்துக்கு ஒரு முறை எங்களை சோதனை செய்கிறார். ஜோர்டான் அரசால் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவராலும் நாங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம். இந்நிலையில், உடனடியாக மீண்டும் படப்பிடிப்பு தொடங்க சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிடைக்கும் வாய்ப்பில் ஊருக்குth திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமாக இருக்கிறது.

    என்ன நடக்கிறது

    என்ன நடக்கிறது

    உலகம் தற்போது இருக்கும் சூழலில் எங்கள் 58 பேரை மீட்பது என்பது அதிகாரிகளின் கவலையாக இருக்காது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அது சரியானதும் கூட. எங்களைப் பற்றி அக்கறை உள்ளவர்களுக்கு, இங்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிவிப்பது, எங்கள் கடமை. அதனால் இதைத் தெரிவிக்கிறோம்.

    பாதுகாப்பாக இருங்கள்

    பாதுகாப்பாக இருங்கள்

    உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பக் காத்துக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்குச் சரியான நேரமும், வாய்ப்பும் எப்போது கிடைக்கிறதோ, அப்போது ஊருக்குத் திரும்புவோம். அதுவரை, அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இந்த வாழ்க்கை மீண்டும் சகஜமாக மாறும் என்று நம்புவோம். இவ்வாறு நடிகர் பிருத்விராஜ் கூறியுள்ளார்.

    English summary
    actor Prithviraj, stranded in Jordan along with 58 crew members of his film 'Aadujeevidham' directed by Blessy. The actor has penned an appeal to the government of India to help him and his crew members get home.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X